எலிப்பரிசோதனையில் குளூக்கோகார்ட்டிகாய்ட் என்ற ஸ்ட்ரெஸ் சுரப்பிகளை நீண்ட காலம் எலிகளில் செலுத்தி தினப்படி சுரப்பி வேலைப்பாடு மற்றும் உடல் ஒத்திசைவுத் தன்மையை தொந்தரவு செய்து ஆய்வு செய்ததில். கொழுப்பு செல் வளர்ச்சியை இது தூண்டி விடுவதையும் அதே வேளையில் இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து ரத்தத்தில் கூடுதல் சர்க்கரையின் அளவைக் குறைப்பதும் தெரியவந்தது.
இந்த ஆய்வில் தெரியவந்த கொழுப்பு செல் வளர்ச்சியைத் தூண்டி விடும் காரணிகள் பிறகு எலிகள் ஓய்வில் இருக்கும் போது கொழுப்பு செல்களாகவே மாறிவிடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஸ்ட்ரெஸ் என்பதும் பிற ஒத்திசைவுத் தொந்தரவுக் காரணிகளும் கொழுப்பு செல்கள் உருவாகக் காரணமாகி உடல் பருமன் ஏற்படுகிறது என்கிறது இந்த ஆய்வு. அதாவது இதனால் உடலின் பயலாஜிக்கல் கிளாக் என்ற உடல் இயக்க இயற்கை கெடிகாரம் பழுதடைந்து ஹார்மோன் சமச்சீரைக் குலைப்பதால் உடல் பருமன் ஏற்படுகிறது.
உடல் பருமன் விவகாரம் குறித்து நாம் ஆழமாக கற்கக் கற்க அதற்கான மருந்து தயாரிப்பில் முன்னேற்றம் ஏற்படும் என்கிறார்கள் இந்த அமெரிக்க ஆய்வாளர்கள். இந்தக் கண்டுப்பிடிப்பின் மூலம் உடற்பருமன் அடைந்தவர்களின் சர்கேடியன் ரிதம் என்பதை மாற்றியமைக்க முடியும் என்று தெரியவந்துள்ளது. கொழுப்பு செல்களை அதன் முந்தைய வடிவத்திலேயே அழித்து கொழுப்பு செல்களாக அது மாறுவதைத் தடுக்கும் சிகிச்சையும் சாத்தியம்.
இந்த ஆய்வில் ஈடுபட்ட அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி டாக்டர் டெரூயெல் கூறும்போது, “நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லிலுமே செல் கெடிகாரம் இருக்கும். நம் மூளையில் அனைத்தையும் கண்காணிக்கும் மாஸ்டர் கெடிகார அமைப்பு உள்ளது. இதுதான் ஹார்மோன் சுரப்பதைக் கட்டுப்படுத்துகிறது. இவை எப்படி ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்பதைக் கண்டறிந்தால் நாம் அதனை எப்படி கட்டுப்படுத்துவது என்ற சிகிச்சை முறை மேலும் எளிதாகும்” என்கிறார்.