இதய நோய்க்கு காரணமாக இருக்கும் கொலஸ்ட்ரால் பிரச்சனை உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் தரக்கூடியதாக உள்ளது. இதற்கு வாழ்க்கை முறை முக்கிய காரணமாக சொல்லப்பட்டாலும் அதை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும் பெரும் சிரமமாக உள்ளது. கொலஸ்ட்ரால் இதய நோய் மட்டுமல்லாது உடலளவில் பல ஆரோக்கிய சீர்கேட்டை தருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உடலின் அதிக கொலஸ்ட்ரால் அல்லது LDL cholesterol அளவு அதிகரிக்கும்போது அது தமனிகளில் தேங்கி இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இதனால் மாரடைப்பு , பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கிறது. இதை தடுக்கவே ஸ்டேடின்ஸ் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகிறது. அவ்வாறு இந்த மருந்தை உட்கொள்வதால் கல்லீரலின் அதிக LDL cholesterol உற்பத்தியை தடுகிறது. இதனால் இதயம் தொடர்பான பாதிப்புகளையும் தவிர்க்க முடியும்.
ஆனால் ஆய்வுப் படி ஸ்டேடின்ஸ் பக்கவிளைவு காரணமக 10% அதிகமான மக்கள் இந்த மாத்திரையை உட்கொள்வதில்லை. அதாவது இது தசை வலி, உடல் சோர்வு போன்ற பாதிப்புகளை உண்டாக்குகிறது. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள Nexletol மாத்திரையில் இது போன்ற தசை வலி இல்லை. அதேசமயம் கல்லீரல் உற்பத்தி செய்யும் கெட்ட கொலஸ்ட்ராலையும் தடுக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.