மாதவிடாய் என்பது பல பெண்களுக்கு அசவுகரியமான நாட்களாக இருக்கிறது . குறிப்பாக குடும்பத்தில் ஏதேனும் விஷேஷ, அல்லது கோவிலுக்கு செல்ல வேண்டிய நாட்களின் போது மாதவிடாய் நெருங்கினால் ஒரு வித அச்ச உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இதுபோன்ற எல்லா சந்தர்பங்களில் நாங்கள் மாதவிடாயை தவிர்க்க விரும்புகிறோம். இதனை தாமதப்படுத்த தற்போது மாத்திரைகள் கிடைக்கிறது . ஆனால் இவை பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடும் என்பதால், இயற்கையான முறையில் மாதவிடாயை தாமதப்படுத்த முயற்சிப்பது நல்லது. இயற்கையாகவே மாதவிடாய் காலத்தைத் தள்ளிப்போட நீங்கள் செய்ய வேண்டியது குறித்து இங்கு காண்போம்.
பொட்டுக்கடலை : பொட்டுக்கடலை அனைவரது சமையலறையிலும் இருக்கும் ஒரு பொருளாகும். மாதவிடாயை தள்ளி போட நினைப்பவர்கள் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் பொட்டுக்கடலையை நன்கு மென்று தின்று, தண்ணீர் பருகி வர வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் எளிமையாக தள்ளி போடலாம், போட்டுக்கடலையை நல்ல எண்ணெய்யில் கலந்து சாப்பிடு வந்தாலும் நல்ல பலன் பெறலாம்.
ஆப்பிள் சாறு வினிகர் : ஆப்பிள் சைடர் வினிகர் மாதவிடாய் காலத்தை இயற்கையாக தாமதப்படுத்த உதவும் ஒரு சிறந்த தீர்வாகும். உங்களது மாதவிடாய் எதிர்பார்க்கப்படும் தேதிக்கு குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பு ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலந்து அருந்தவும். பிசிஓடியால் பாதிக்கப்பட்ட பெண் அளித்த தகவலின்படி, ஆப்பிள் சைடர் வினிகரை உட்கொண்டால், இரத்தம் உறைதல் மற்றும் இரத்த ஓட்டத்தை இலகுவாக்கும் இன்சுலின் அளவு குறையும் என தெரிவித்துள்ளார்.
ஜெலட்டின் : ஜெலட்டின் என்பது ஒரு தெளிவான, சுவையற்ற புரதம் ஆகும். நீங்கள் எதிர்பார்க்கப்படும் மாதவிடாய் தேதிக்கு 3-4 நாட்களுக்கு முன்னர் ஒரு நாளைக்கு ஒரு முறை ஜெலட்டின் தண்ணீரை குடிக்கவும். இது ஒரு சிறந்த தீர்வாகும், இது மாதவிடாய் சுழற்சியை தாமதப்படுத்த உதவும். இருப்பினும், ஜெலட்டின் அதிகப்படியான உட்கொள்ளல் அஜீரணம் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால் கவனம் தேவை.
கிராம் பருப்பு சூப் : உளுத்தம் பருப்பை நன்றாக பொடி செய்து வைத்து கொள்ளவும். நீங்கள் அருந்தும் சூப்பில் 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு பொடியை சேர்த்து நன்கு கலந்து அருந்தவும். மாதவிடாய் சுழற்சியின் எதிர்பார்க்கப்படும் தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பு இந்த கலவையை உட்கொள்ளவும். இந்த சூப்பை தினமும் குறைந்த அளவில் மட்டுமே அருந்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இலவங்கப்பட்டை தேநீர்: இலவங்கப்பட்டை எந்த பக்க விளைவுகளும் இல்லாத ஒரு அற்புதமான தீர்வாகும். இலவங்கப்பட்டை தேநீர் சுவையானது மற்றும் ஆரோக்கியமானது. இதனை மாதவிடாய் தாமதத்திற்கு உதவுகிறது, மாதவிடாய் பிடிப்புகள் மற்றும் வயிறு வீக்கத்தை குறைக்கிறது. இலவங்கப்பட்டை தேநீர் அருந்தி வந்தால் மாதவிடாயை தாமதப்படுத்த முடியும்.