பெண்கள் ஒவ்வொருவரும் மாதவிலக்கை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் இயற்கையான நியதி ஆகும். அதே சமயம், மாதவிலக்கு காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் அசௌகரியகங்கள் மற்றும் பிரச்சனைகள் ஏராளம். குறிப்பாக உடல் சோர்வு, அடிவயிற்று வலி, தசை பிடிப்பு, மார்பு பகுதியில் லேசான வீக்கம் மற்றும் வயிறு உப்புசம் போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
நமக்கு மாதவிலக்கு வர இருக்கின்ற சமயத்தில் குடும்ப விழாக்கள், நண்பர்களுடனான சந்திப்பு, அலுவலக சுற்றுலாக்கள் அல்லது பார்ட்டி என ஏதேனும் முக்கியமான நிகழ்வுகள் இருந்தால், இந்த பிரச்சனைகளுடன் அங்கு பங்கெடுப்பதை விரும்ப மாட்டோம். விளையாட்டு வீராங்கனைகளாக இருப்பின், மாதவிலக்கு நாட்களை ஒட்டி போட்டிகள் அமைந்தால் அதில் பங்கெடுப்பது சிரமமாக இருக்கும்.இப்படியான தருணங்களில் மாதவிலக்கை தள்ளிவைக்க வேண்டும் என்பதுதான் அனேக பெண்களின் விருப்பமாக இருக்கும். ஆக, அதை இயற்கையான முறையில் மேற்கொள்வது எப்படி என்பதை இந்த செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.