அவை பல ஆண்டுகளாக இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை வலி நிவாரணி மாத்திரைகளைப் போல் அல்லாமல் கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் குடல்களை சேதப்படுத்தாது. எனவே, ஒவ்வொரு சமையலறையிலும் எளிதாகக் காணக்கூடிய மற்றும் எந்த தொந்தரவும் இல்லாமல் பயன்படுத்தக்கூடிய விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஐஸ் : ஈமெடிஹெல்த் படி , ஒவ்வொருவரின் வீட்டின் குளிர்சாதன பெட்டியிலும் வலி நிவாரணி உள்ளது. அதாவது ஃபிரிட்ஜில் உருவாக்கப்படும் ஐஸ் கட்டிகளே நமக்கான சிறந்த வலி நிவாரணிகள் என்பது தெரியுமா..? ஆம், இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது எந்த வகையான வலி மற்றும் வீக்கத்தையும் போக்க பயன்படுகிறது. உங்கள் தசைகள், தசைநார்கள் ஆகியவற்றில் வலி அல்லது வீக்கம் இருந்தால், காயம் ஏற்பட்ட 48 மணி நேரத்திற்குள் 20-20 நிமிடங்களுக்கு ஒரு ஐஸ் கட்டியை துணியில் சுருட்டி ஒத்தடம் வைக்க வலி மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
சூடான நீர் : ஒரு நாள்பட்ட வலி என்றால், சூடான நீரின் ஒத்தடம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஊட்டச்சத்து பொருட்கள் உடலில் செல்ல அனுமதிக்கிறது மற்றும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது, இதனால் வலியை நீக்குகிறது. இதை செய்ய, ஒரு பருத்தி துணியை வெந்நீரில் போட்டு நன்கு பிழிந்து, வலி உள்ள இடத்தில் அழுத்தவும். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை 15 நிமிடம் ஒத்தடம் கொடுத்தால் நிவாரணம் கிடைக்கும்.
மஞ்சள் : மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது வீக்கம் மற்றும் வலியைப் போக்க உதவுகிறது. இதற்கு, ஒரு கப் சூடான பாலில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் கலக்கவும். இந்த பானத்தை தினமும் இரவில் குடித்து வந்தால், எல்லாவிதமான வலிகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். காயம் உள்ள இடத்தில் மஞ்சளை பேஸ்ட் போல் குழைத்தும் ஆயின்மெண்ட் போலவும் தடவலாம்.
கிராம்பு : கிராம்பு வலி உள்ள இடத்தில் தடவ மரத்துபோன உணர்வை தரும். எனவேதான் இது பல்வலியிலிருந்து நிவாரணம் பெற பெரிதும் உதவுகிறது மற்றும் மூட்டுவலி வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. உங்களுக்கு எப்போதாவது பல் வலி இருந்தால், ஒரு கிராம்பை மென்று சாப்பிடுங்கள். தசைகளில் வலி இருந்தால் கிராம்பு எண்ணெயைத் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.