How To Detox Intestine : மனிதன் ஆரோக்கியமாக வாழ ஆரோக்கியமான உணவு அவசியம். ஏனென்றால், உணவில் இருந்துதான் உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது. அன்றைய நாள் முழுவதும் சுறு சுறுப்பாக இருக்க உணவு தேவையான ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது. இன்றைய காலத்தில் நாம் எந்த உணவையும் உடலுக்கு கெடுதி என விட்டு வைப்பதில்லை. நடப்பது, பறப்பது, ஊர்வது, நீந்துவது என அனைத்தையும் உண்கிறோம். அதுமட்டும் அல்ல, சாப்பிடுவதற்கும் நேரம் காலம் பார்ப்பதில்லை. இதனால், அடிக்கடி செரிமானப்பிரச்சனை ஏற்படும். குடலில் அழுக்குகள் தேங்கும். எனவே, நாம் சில நேரங்களில் வயிறு உப்புசமாக இருப்பதை உணர்வோம்.
ஏனென்றால், சிறுகுடலில் உணவு செரிக்கப்பட்டு அதிலிருந்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பெறப்படுகின்றன, ஆனால் சில நேரங்களில் உணவு வயிற்றில் சரியாக செரிமானம் ஆகாததால், உடலுக்கு நிறைய சிக்கல்கள் ஏற்படும். எனவே தான் வயிறு உப்புசமாக இருப்பதை உணர்கிறோம். மற்ற உறுப்புகளில் பிரச்சினை ஏற்பட்டால் நம்மால் சமாளிக்க முடியும். ஆனால், வயிற்றில் ஒரு பிரச்சினை என்றால் எந்த விஷயத்திலும் நம்மால் கவனம் செலுத்த முடியாது. உங்கள் குடலில் தேங்கியுள்ள அழுக்கை முற்றிலுமாக நீக்க விரும்பினால், உங்களுக்கு இயற்கையான மூன்று பழச்சாறுகள் பற்றி கூறுகிறோம். இந்த இயற்கையான சாற்றை உட்கொண்டால், குடலில் உள்ள அனைத்து அழுக்குகளையும் ஒரு நொடியில் சுத்தம் செய்யலாம்.