முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » ஆண்களின் அந்தரங்க உறுப்பு சுகாதாரம் பற்றி பரவும் கட்டுக்கதைகளும்… உண்மைகளும்...

ஆண்களின் அந்தரங்க உறுப்பு சுகாதாரம் பற்றி பரவும் கட்டுக்கதைகளும்… உண்மைகளும்...

ஆண்களுக்கான அந்தரங்க சுகாதாரம் பற்றி எப்போதாவது தான் விவாதம் செய்யப்படுகிறது என்பதே மிகவும் விசித்திரமானது. பொதுவாக அந்தரங்க சுகாதாரம் என்பது பெண் தனிநபர் பராமரிப்பு பற்றி மட்டுமே அதிகம் பேசுகிறது. ஆண்களுக்கு அந்தரங்க பகுதியின் சுகாதாரம் மற்றும் முக்கியத்துவம் பற்றி பெரிதாக தெரிவதில்லை. ஆனால் பெண்களை போலவே ஆண்களுக்கான அந்தரங்க சுகாதாரமும் மிகவும் முக்கியமானது.

  • 16

    ஆண்களின் அந்தரங்க உறுப்பு சுகாதாரம் பற்றி பரவும் கட்டுக்கதைகளும்… உண்மைகளும்...

    பெண்களுக்கு உடலின் அந்தரங்க பகுதிகளுக்கான சுகாதாரம் எந்த அளவிற்கு முக்கியமோ, அதை போலவே ஆண்களுக்கும் அந்தரங்க சுகாதாரம் மிகவும் முக்கியமானதே. ஆண்களுக்கான அந்தரங்க சுகாதாரம் பற்றி எப்போதாவது தான் விவாதம் செய்யப்படுகிறது என்பதே மிகவும் விசித்திரமானது. பொதுவாக அந்தரங்க சுகாதாரம் என்பது பெண் தனிநபர் பராமரிப்பு பற்றி மட்டுமே அதிகம் பேசுகிறது. ஆண்களுக்கு அந்தரங்க பகுதியின் சுகாதாரம் மற்றும் முக்கியத்துவம் பற்றி பெரிதாக தெரிவதில்லை. ஆனால் பெண்களை போலவே ஆண்களுக்கான அந்தரங்க சுகாதாரமும் மிகவும் முக்கியமானது.

    MORE
    GALLERIES

  • 26

    ஆண்களின் அந்தரங்க உறுப்பு சுகாதாரம் பற்றி பரவும் கட்டுக்கதைகளும்… உண்மைகளும்...

    பெண்களை போலவே ஆண்களும் தங்களது அந்தரங்க பகுதியை சுத்தமாக வைத்து கொள்வதால், அப்பழக்கம் அவர்களை தொற்று அல்லது STD எனப்படும் பால்வினை நோய்களில் இருந்து பாதுகாக்கிறது மற்றும் ஓரளவு ஆண்களின் பாலியல் உறவை மேம்படுத்துகிறது. மற்ற எந்த ஒரு உடல் பாகத்தையும் சுத்தமாக வைத்திருப்பது போலவே ஆண்கள் தங்கள் அந்தரங்க உறுப்பை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். இதன் மூலம் பாலியல் சுகாதாரம் பராமரிக்கப்பட்டு பாலியல் அனுபவம் மேம்படும். மற்ற இரு விஷயங்களில் சில தவறான கட்டுக்கதைகள் போலவே, ஆண்களின் அந்தரங்க சுகாதாரம் குறித்தும் குறித்து பல கதைகள் இருக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 36

    ஆண்களின் அந்தரங்க உறுப்பு சுகாதாரம் பற்றி பரவும் கட்டுக்கதைகளும்… உண்மைகளும்...

    இதில் ஒன்று தினமும் தவறாமல் குளிக்கும் பழக்கம் உடைய ஆண்களாக இருந்தால், அவர்களின் அந்தரங்க பகுதி தானே சுத்தமாகவே இருக்கும். பலர் குளிக்கும் போது தங்கள் உடலை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் சோப்பு, தங்கள் அந்தரங்கத்தை சுத்தம் செய்யும் என்று நம்புகிறார்கள்.சோப்பு கொண்டு குளிக்கும் போது வேக வேகமாக அந்தரங்க பகுதியையும் குளிப்படுவதை சில வழக்கமாக வைத்திருக்கிறார்கள். சோப்பு மூலம் உடலுக்கு கிடைக்கும் சுத்தம், தங்கள் அந்தரங்க உறுப்பிற்கும் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் எப்படி தலைக்கு ஷாம்பு போட்டு ஸ்பெஷலாக குளிக்கிறீர்களோ, அது போல் அந்தரங்க உறுப்பையும் தனியாக கவனித்து சுத்தம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

    MORE
    GALLERIES

  • 46

    ஆண்களின் அந்தரங்க உறுப்பு சுகாதாரம் பற்றி பரவும் கட்டுக்கதைகளும்… உண்மைகளும்...

    ஆணுறைகள் அனைத்து அந்தரங்க தூய்மைப் பிரச்சனைகளையும் தீர்க்கும் : உடலுறுவு கொள்ளும் போது பாதுகாப்பாக இருக்க மற்றும் அந்தரங்க சுகாதாரத்தை பேண ஆணுறைகள் பயன்படுத்துவதால், தினசரி அந்தரங்க சுகாதாரம் தேவையில்லை என்று சில ஆண்கள் நினைக்கிறர்கள். உடலுறவுக்கு முன்னரும் பின்னரும் அந்தரங்க உறுப்பை சுத்தம் செய்து கொள்வது ஒரு சிறந்த ஐடியா. ஆனால் சில ஆண்கள் ஆணுறையை பயன்படுத்தியதால் உறவிற்கு பின்னர் பிறப்புறுப்பை நன்றாக சுத்தம் செய்ய தேவை இல்லை என்று நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆணுறையில் இருக்கும் லேடெக்ஸ் உள்ளிட்ட பிற கெமிக்கல்கள் அந்தரங்க உறுப்பின் தோலில் ஒட்டி கொள்ளலாம். இதனால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் கடுமையான பிரச்சினைகள் உடலில் ஏற்படலாம். எனவே ஆணுறைகளை பயன்படுத்தினாலும் உறவிற்கு பின் அந்தரங்க சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 56

    ஆண்களின் அந்தரங்க உறுப்பு சுகாதாரம் பற்றி பரவும் கட்டுக்கதைகளும்… உண்மைகளும்...

    சோப் அல்லது பாடி வாஷ் நல்லது : நாம் உடலை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பாடி வாஷ் மற்றும் சோப்புகள் நம் உடலுக்கு வேண்டுமானல் நல்லதாக இருக்கலாம் ஆனால் கண்டிப்பாக நம் அந்தரங்க உறுப்புகளுக்கு நல்லதல்ல. நம் அந்தரங்க உறுப்பை சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானது. எனவே சோப்புகளில் இருக்கும் கடும் கெமிக்கல்கள் அரிப்பு, தடித்து போதல் மற்றும் சிவந்து போதல் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும். எனவே அந்தரங்க பகுதியை சுத்தப்படுத்த தயாரிக்கப்பட்டுள்ள ஸ்பெஷல் கிளீனிங் வாஷ்களை (intimate washes) பயன்படுத்தலாம்.

    MORE
    GALLERIES

  • 66

    ஆண்களின் அந்தரங்க உறுப்பு சுகாதாரம் பற்றி பரவும் கட்டுக்கதைகளும்… உண்மைகளும்...

    மனைவியின் அந்தரங்க கிளீனிங் வாஷ்களை ஆண்கள் பயன்படுத்தலாம் : இது ஏற்புடையதில்லை. ஏனென்றால் சில நேரங்களில் ஒரே அந்தரங்க கிளீனிங் வாஷை இரு பெண்களே கூட பயன்படுத்த முடியாது. ஏனென்றால் அவர்கள் இருவருக்கும் வெவ்வேறு உடல்கள் உள்ளன மற்றும் வெவ்வேறு தேவைகள் உள்ளன. ஆண்களின் அந்தரங்க pH அளவு 5.3 - 5.8 மற்றும் பெண்களின் அந்தரங்க pH அளவு 3.5 - 4.5 எனவே மேற்கண்ட pH அளவுகளின் அடிப்படையில் இருபாலாருக்குமான அந்தரங்க கிளீனிங் வாஷ்கள் வெவ்வேறு பொருட்களால் தயாரிக்கபருகின்றன. எனவே பெண்களின் அந்தரங்க சுகாதார வாஷை ஆண்கள் பயன்படுத்த கூடாது.

    MORE
    GALLERIES