ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » சிறுநீரகக் கல் பிரச்சனை.... வலியை குறைக்க உதவும் இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்கள்..!

சிறுநீரகக் கல் பிரச்சனை.... வலியை குறைக்க உதவும் இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்கள்..!

kidney stone : சரியான நேரத்தில் நோய் பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால் நோய் பாதிப்பின் தீவிரத்தில் இருந்து தற்காத்து, சீரான காலத்தில் நோய் பாதிப்பில் இருந்து மீளலாம்.

 • 17

  சிறுநீரகக் கல் பிரச்சனை.... வலியை குறைக்க உதவும் இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்கள்..!

  உணவு பழக்க வழக்க மாற்றம், மாறிவரும் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப சிறுநீரக கற்கள் பிரச்சனை பரவலாக பெருகி வரும் நோய்களுள் ஒன்றாக உள்ளது. உடலில் தேங்கும் கழிவுப்பொருட்களால் சிறுநீரக பாதிப்பு அல்லது சிறுநீரக கற்கள் உருவாகின்றன. சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பை வரை, சிறுநீர்க் குழாயின் எந்தப் பகுதியிலும் கழிவுப்பொருட்களின் படிகங்களால் சிறுநீர் கற்கள் உருவாகலாம்.

  MORE
  GALLERIES

 • 27

  சிறுநீரகக் கல் பிரச்சனை.... வலியை குறைக்க உதவும் இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்கள்..!

  இதனால், இடுப்பு பகுதியில் மிகவும் கடிமான வலி உண்டாகும். சரியான நேரத்தில் நோய் பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால் நோய் பாதிப்பின் தீவிரத்தில் இருந்து தற்காத்து, சீரான காலத்தில் நோய் பாதிப்பில் இருந்து மீளலாம். சிறுநீரக கற்கள் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள பின்பற்ற வேண்டிய 5 வழிமுறைகள்

  MORE
  GALLERIES

 • 37

  சிறுநீரகக் கல் பிரச்சனை.... வலியை குறைக்க உதவும் இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்கள்..!

  கால்சியம் உணவுகள் : நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் இருக்கும் கால்சியம் படிகங்கள் சிறுநீர் வழியாக வெளியேறாமல், சிறுநீர் பாதையில் தங்குவதால் சிறுநீர் கற்கள் உருவாவதாக கூறப்படுகிறது. ஆனால், சரியான அளவில் கால்சியம் உணவுகளை எடுத்துக்கொண்டால், சிறுநீர் பாதையில் கற்கள் உருவாவதை தடுக்க முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. கால்சியம் அதிகம் உள்ள உணவுகளான பால், பாலடைக்கட்டி, தயிர் போன்றவற்றை உங்கள் டையட்டில் சரியான அளவில் சேர்த்துக்கொள்ளும்போது, அவை ஆக்சலேட்டுகள் உறிஞ்சுவதை தடுத்து சிறுநீர் கற்கள் ஏற்படுவதை தடுக்கின்றன.

  MORE
  GALLERIES

 • 47

  சிறுநீரகக் கல் பிரச்சனை.... வலியை குறைக்க உதவும் இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்கள்..!

  உப்பைக் குறைத்தல் : சிறுநீரில் கால்சியம் வெறியேறுவது அதிகரிக்கும்போது, உங்கள் டையட்டில் உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், நொறுக்குத்தீனிகளை குறைக்க வேண்டும். இந்த உணவுகள் சிறுநீர் மூலம் கால்சியம் வெறியேற்றத்தை அதிகரித்து சிறுநீர் கற்கள் உருவாக காரணியாக இருக்கின்றன. இதில் கவனம் செலுத்தும்பட்சத்தில் சிறுநீரக கற்கள் உருவாவதில் இருந்து தப்பிக்கலாம். மட்டனில் இருக்கும் பியூரின்கள், யூரிக் அமில கற்களை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற பிரச்சனைகளை ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் மட்டனை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

  MORE
  GALLERIES

 • 57

  சிறுநீரகக் கல் பிரச்சனை.... வலியை குறைக்க உதவும் இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்கள்..!

  மக்னீசியம் : உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக வைத்திருப்பதிலும், புத்துணர்ச்சியாக இருப்பதற்கும் மக்னீசியத்தின் பங்கு முக்கியமானது. கால்சியம் கற்கள் உருவாவதை தடுப்பதில் மக்னீசியம் மூளையாக செயல்படுவதால், மக்னீசியம் நிறைந்த உணவுகளான பருப்பு வகைகள், வெண்ணெய், அவக்கோடா ஆகிவற்றை தினசரி உணவில் எடுத்துகொள்ளலாம். மக்னீசியம் நிறைந்த உணவுகள் ஆக்சலேட்டுகள் குடலில் உறிஞ்சுவதைத் தடுத்து, சிறுநீரக கற்கள் உருவாதையும் தடுக்கின்றன.

  MORE
  GALLERIES

 • 67

  சிறுநீரகக் கல் பிரச்சனை.... வலியை குறைக்க உதவும் இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்கள்..!

  சிட்ரிக் உணவுகள் : சிட்ரிக் உணவுகள் சிறுநீர் பாதையில் தேங்கும் படிகங்களை கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகின்றன. எலுமிச்சை பழம், ஆரஞ்சு, திராட்சை பழங்களில் சிட்ரிக் அமிலம் நிறைந்து இருக்கின்றன. அந்த வகை உணவுகளை அதிகளவு எடுத்துக்கொள்ளும்போது, சிறுநீர் பாதையில் தேங்கியிருக்கும் கால்சியம் ஆக்சலேட்டுகளை கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகின்றன. இதன் மூலம் சிறுநீரக கற்கள் பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 77

  சிறுநீரகக் கல் பிரச்சனை.... வலியை குறைக்க உதவும் இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்கள்..!

  நீர் அருந்துதல் : உடலில் போதுமான அளவு நீர் இல்லாமல் இருப்பது சிறுநீரக கற்கள் உருவாக காரணமாக இருக்கின்றன. அதனால், உடலில் எப்போதும் நீர் பற்றாக்குறை இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதிகளவு நீர் அருந்துதல் அல்லது பழச்சாறை பருகி வந்தால், சிறுநீர் பாதையில் கற்கள் உருவாகாது. சோடா, செயற்கை இனிப்பு சுவையூட்டப்பட்ட பானங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

  MORE
  GALLERIES