உடல் நலத்தை மேம்படுத்தி வருவது பற்றி அதிகமாக பேசி வருகின்றோம். ஆனால், உடல் நலம் என்பது மன நலத்தையும் சேர்த்து தான் என்பதை பலர் புரிந்து கொள்ளலாம் உள்ளனர். இன்றைய கால கட்டத்தில் உடல் நலம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளதோ, அதே அளவிற்கு மன நலனும் பாதிக்கப்பட்டுள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றனர். மன நலன் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை உங்கள் மூளை தான் நிர்ணயிக்கும். இதை ஆரோக்கியமாக வைக்க பல வழிகள் உண்டு. அதில் மிக முக்கியமானது தான் நாம் எடுத்து கொள்ளும் உணவு வகைகள். உங்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவும் 6 முக்கிய உணவுகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
டார்க் சாக்லேட் : கசப்பான சுவை கொண்ட டார்க் சாக்லேட் உங்கள் மூளைக்கு மிகவும் நல்லது. இதில் இரும்பு சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. எனவே டார்க் சாக்லேட்டின் தினமும் சிறிதளவு சாப்பிட்டால் உங்கள் மனநிலை சிறப்பாக இருக்கும். 2019 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, டார்க் சாக்லேட்டை தொடர்ந்து உட்கொள்வது மனச்சோர்வு அறிகுறிகளில் இருந்து 70 சதவீதம் வரை குறைக்க செய்கிறது என்று தெரித்துள்ளனர்.
மசாலா பொருட்கள் : மஞ்சள், குங்குமப்பூ, இஞ்சி போன்ற மசாலாப் பொருட்களில் தனித்துவமான சுவை இருப்பதை போன்றே பல மருத்துவ குணங்களும் உள்ளது. இவை அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடெண்ட்ஸை கொண்டுள்ளது. எனவே அழுத்தம் மற்றும் வீக்கத்தைத் தடுக்க செய்கிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் என்கிற மூலப்பொருள் பதற்றத்தை போக்கி, மூளையின் இயக்கத்தை சீராக வைக்கிறது.
நட்ஸ் : பாதாம், அக்ரூட், முந்திரி மற்றும் பிரேசில் நட்ஸ் போன்ற நட்ஸ் வகைகள் மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. எனவே அவை மூளையின் செயல்பாட்டை சிறப்பாக வைக்க உதவும். இவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளதால் உங்களின் நினைவாற்றல் மற்றும் சிந்தனையை மேம்படுத்தும். மேலும் இவை இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. எனவே தினமும் சிறிதளவு நட்ஸ் சாப்பிடுவது முழு உடலுக்கும் நன்மை தரும்.
அவகேடோ : இந்த அவகேடோ பழத்தின் விலை உயர்வாக இருப்பதால் பலர் இதை சாப்பிடுவதில்லை. ஆனால், மூளையின் ஆரோக்கியத்திற்கு இது மிகவும் அவசியமான பழமாகும். இந்த பழத்தில் மெக்னீஷியம் நிறைந்துள்ளது. இது மூளையின் செயல்பாடுகளை சீராக வைக்க கூடிய முக்கிய ஊட்டச்சத்தாகும். பொதுவாக மெக்னீசியம் குறைபாடு உள்ளவர்களுக்கு மனச்சோர்வு அபாயம் ஏற்படுகிறது என்று பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
நொதித்த உணவுகள் : நல்ல பாக்டீரியா, ஈஸ்ட் போன்றவை நொதித்த உணவுகளில் அதிகம் உள்ளது. தயிர், யோகர்ட், புளித்த மாவு, கொம்புச்சா ஆகியவற்றில் இந்த நன்மைகளை நீங்கள் பெறலாம். இந்த உணவுகள் குடல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இவை பதட்டத்தைக் குறைக்கும் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். 2016 ஆம் ஆண்டின் நடத்தப்பட்ட சுமார் 45 ஆய்வுகளின் புளிக்கவைக்கப்பட்ட உணவுகள் நினைவாற்றலை மேம்படுத்தி, அறிவாற்றல் திறனை மேம்படுத்தும் என்று கண்டுபிடித்து உள்ளனர்.
கீரை வகைகள் : கீரைகள் மலிவு விலையில் கிடைக்கும் மிக ஆரோக்கியமான உணவாகும். இருப்பினும் பலர் இந்த வகை உணவுகளை அதிகம் விரும்புவதில்லை. டேன்டேலியன் கீரைகள், முளைக்கீரை, முருங்கை கீரை போன்ற கீரை வகைகளில் ஃபோலேட், இரும்புசத்து, வைட்டமின் B9 மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது. இவை அறிவு திறனை மேம்படுத்த கூடிய பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. எனவே மூளை ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்கும்.