மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி, வயிறு இறுக்குதல் , தசை வலி, உடல் அசதி போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதற்காகப் பலர் வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்கின்றனர். ஆனால் மாத்திரைகளை ஒவ்வொரு மாதமும் பயன்படுத்துவது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மாதவிடாய் வலியைத் தவிர்க்க நம் உணவுப் பழக்கத்திலும் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம். அதற்கு சில உணவுகளைத் தவிர்த்தாலே வலியைக் குறைக்கலாம். அவை என்னென்ன உணவுகள் என்று பார்க்கலாம்.
சர்க்கரை உணவுகள் : மாதவிடாய் காலத்தில் சிலருக்குச் சர்க்கரை நிறைந்த உணவு , ஸ்வீட் ஆகியவற்றை உண்ண ஆசை உண்டாகும். ஆனால் அதற்கு இடம் கொடுக்காமல் இனிப்புகளைத் தவிருங்கள். சர்க்கரை நிறைந்த குளிர்பானங்களையும் தவிர்க்கவும். மாதவிடாய் காலத்தில் சர்க்கரை அதிகம் உண்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு ஏற்ற இறக்கமாக இருக்கும். இதனால் பதட்டம், திடீரென மன அமைதி, வயிறு இறுக்கிப் பிடித்தல் போன்றவை ஏற்படும்.
உண்ணக்கூடிய உணவுகள் : மாதவிடாய் காலத்தில் தயிர் , நட்ஸ் , இஞ்சி, பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள் , டார்க் சாக்லெட், வாழைப்பழம், சோம்பு , ஆரஞ்சு, தர்பூசணி போன்ற நீர் நிறைந்த உணவுகளை அதிகமாக உண்ணுங்கள். இவற்றை மாதவிடாயின் ஐந்து அல்லது மூன்று நாட்களுக்கும் எடுத்துக்கொள்வது உடலுக்கும் நல்லது. மாதவிடாய் பிரச்னைகளையும் தவிர்க்கலாம்.