நாம் இழந்த உணவுகளை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தும் அவர், பலாப்பழ கொட்டைகளை கொண்டு ருசியான உணவு வகைகளை செய்யலாம் என விளக்குகிறார். இதில் துத்தநாகம், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது. இதனால் உங்கள் திசுக்களுக்கு வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகிறது என கூறியுள்ளார். இதன் நன்மைகள் குறித்து அவர் கூறிய தகவல்களை நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.,
செரிமானத்தை மேம்படுத்தவும் : பலாப்பழ கொட்டைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, பலாப்பழ விதைகள் மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கும் என அறியப்படுகிறது. எனவே பலாப்பழ கொட்டைகளை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி வயிற்றுப்போக்கு பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கும்.
தசைகளை வலுவாக்குகிறது : புரத உள்ளடக்கம் நிறைந்த இந்த பலாப்பழ கொட்டைகள், தசைகளை வலுவாக்க உதவுகின்றன. உடனடி பலனை பெற, உங்கள் வழக்கமான உணவு பட்டியலில் இதனை சேர்த்துக்கொள்ளுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். பலாப்பழக் கொட்டைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் உங்கள் உடலின் புரதச்சத்து அதிகரிக்கிறது.
முடி வளர்ச்சிக்கு நல்லது : பலாப்பழ கொட்டையில் உள்ள வைட்டமின் ஏ சத்து, முடி உடைவதைத் தடுக்கிறது. இந்த கொட்டையில் உள்ள அதிகமான புரதச் சத்து, முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. இரும்பு சத்து இந்த கொட்டையில் அதிகம் உள்ளதால், இரத்த ஓட்டம் அதிகரித்து, உச்சந்தலைக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. இதனால் உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக வளர்கிறது.
இரத்த சோகையைத் தடுக்கிறது : இரும்புச் சத்து நிறைந்த இந்த விதைகள் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவுவதால் இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் பலாப்பழ கொட்டைகளை அதிகம் சாப்பிடலாம். மேலும் பலாப்பழ கொட்டையில் உள்ள மங்கனீஸ் , இரத்தம் உறைதலை சீராக்குகிறது என்று கூறப்படுகிறது. எனவே உங்கள் அன்றாட உணவில் பலாப்பழ கொட்டைகளை சேர்த்து கொள்ளுங்கள்.