இரவில் எந்தவித தொந்தரவும் இன்றி நிம்மதியாக உறங்கினாலே அடுத்த நாள் வேலைகளை கவனிக்க உடல் புத்துணர்ச்சியுடனும் அதிக சக்தியுடனும் காணப்படும். ஆனால் பலருக்கும் இரவில் சரியான நேரத்திற்கு தூங்குவதும், அப்படியே தூங்கினாலும் எந்த வித இடையூறுகளும் இல்லாமல் முழு நேர தூக்கத்தை மேற்கொள்வதிலும் பிரச்சனைகள் உள்ளது.
சரியான தூக்கத்தை பெறுவதற்கு நம்முடைய படுக்கை அமைப்பு முறையும் நமக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். முக்கியமாக நாம் எந்த வித போர்வையை பயன்படுத்துகிறோம் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. தூங்கும்போது எடை அதிகமுடைய போர்வையை பயன்படுத்தும் போது நமக்கு சில நன்மைகள் கிடைக்கின்றன. நன்றாக தூங்குவதுடன் சில ஆரோக்கிய சம்பந்தப்பட்ட நன்மைகளும் நமக்கு கிடைக்கின்றன.
பதற்றத்தை குறைக்க உதவுகிறது : எடை அதிகமுடைய போர்வையை பயன்படுத்தி தூங்கும்போது நாம் தேவையற்ற பதற்றங்கள் ஏற்படுவதை குறைக்கிறது. உலகம் முழுவதும் 275 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் அதிக பதற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதயம் அதிகமாக துடிப்பதும், அதிகமாக மூச்சு வாங்குவதும் இதன் அறிகுறிகள் ஆகும். எடை அதிகம் உள்ள போர்வை பயன்படுத்தி தூங்கும் போது அவை நமது நரம்பு மண்டலத்தை சாந்தப்படுத்தி ஒரு நல்ல உணர்வை கொடுத்து நிம்மதியாக தூங்க உதவுகிறது.
மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது : நரம்பு மண்டலங்களில் ஏற்படும் சில பிரச்சினைகள் உடல் பருமன், சிறுநீரக கோளாறுகள் ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அதிக எடை உள்ள போர்வைகளை பயன்படுத்தி தூங்கும் போது அவை ஏற்படுத்தும் அழுத்தத்தினால் நரம்பு மண்டலங்கள் சரி செய்யப்பட்டு தேவையற்ற உடல் உபாதைகள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.
கால்சியம் மற்றும் டிமென்ஷியாவில் இருந்து விடுதலை : அல்சைமர், டிமென்ஷியா நோய் பாதிக்கப்பட்டவர்கள் சரியாக உறங்குவதில் சில பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். அதிக எடை உள்ள போர்வைகளை பயன்படுத்தி தூங்கும் போது அவை நரம்பு மண்டலத்தை சீர்படுத்தி பதற்றத்தையும் குறைக்க உதவுகிறது. முக்கியமாக சமீபத்தில் நடத்திய ஆய்வுகளில் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக எடை உடைய போர்வையை பயன்படுத்தி தூங்கும் போது உணர்வு ரீதியான பாதிப்புகள், பிரம்மை போன்ற இரவு நேரங்களில் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து விடுதலை பெற்றதாக தெரிவித்துள்ளனர்.
வலிப்பு நோயின் தாக்கத்தினை குறைக்கிறது : வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு அதிக எடை உள்ள போர்வைகள் நல்ல ஒரு நிவாரணத்தை வழங்குகின்றன. இந்த போர்வைகள் மிதமான ஓர் அழுத்தத்தை, நரம்பு மண்டலத்தின் மேல் ஏற்படுத்தி தேவையற்ற மன அழுத்தத்தை போக்க உதவுகிறது. மேலும் மனமும், உடலும் ரிலாக்ஸாக இருப்பதால் வலிப்பு நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.
கார்டிசால் சுரப்பதை குறைக்கிறது : கார்ட்டிசால் எனப்படும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள்தான் இதய கோளாறுகள், அதிக உடல் எடை கூடுதல், அதிக ரத்த அழுத்தம் போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது. அதிக எடை உள்ள போர்வைகளை பயன்படுத்தும்போது ஏற்படும் விதமான அழுத்தத்தினால் உடலில் கார்டிசால் சுரப்பது கட்டுப்படுத்தப்பட்டு செரடோனின் என்ற நன்மை செய்யும் ஹார்மோன் சுரப்பதும் அதிகரிக்கிறது.
நல்ல மனநிலையை கொடுக்கிறது : மேலே கூறப்பட்டுள்ள வலியை போக்குவது, உளவியல் நோய்களை சரிப்படுத்துவது ஆகியவற்றைத் தாண்டி நமது மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. இந்த போர்வையால் உண்டாகும் மிதமான அழுத்தமானது ஆக்ஸிடோசின் சுரப்பதை அதிகரிக்கிறது. இது நமது மனநிலையை மகிழ்ச்சியாக வைக்க உதவும் ஒரு ஹார்மோன் ஆகும். இதன் காரணமாக நமது நிம்மதியாக உறக்கத்தை மேற்கொள்ள முடியும்.