முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » எம்ஆர்ஐ ஸ்கேன் ஏன் எடுக்கிறார்கள் தெரியுமா..? எந்தெந்த நோய்களுக்கு கட்டாயம் தேவை..?

எம்ஆர்ஐ ஸ்கேன் ஏன் எடுக்கிறார்கள் தெரியுமா..? எந்தெந்த நோய்களுக்கு கட்டாயம் தேவை..?

நீங்கள் எவ்வாறு ஸ்கேன் எடுப்பதற்கு முன்னர் உங்கள் உடலில் இருக்கும் உலோக ஆபரணங்கள் போன்ற உலோகங்கள் சம்பந்தப்பட்ட அனைத்தையும் நீக்கிவிட வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு அளிக்கப்படும் மருத்துவமனையின் உடையை அணிந்து கொண்டு உங்களை கிடைமட்டமாக படுக்க வைத்து, பின்னர் அந்த எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரத்திற்குள் அனுப்பப்படுவீர்கள்.

  • 17

    எம்ஆர்ஐ ஸ்கேன் ஏன் எடுக்கிறார்கள் தெரியுமா..? எந்தெந்த நோய்களுக்கு கட்டாயம் தேவை..?

    மேக்னெட்டிக் ரெசோனன்ஸ் இமேஜிங் என்பதன் சுருக்கமே எம்ஆர்ஐ என்பது ஆகும். அதாவது காந்த அதிர்வுகளை பயன்படுத்தி நமது உடலை ஸ்கேன் செய்வது. இந்த வகையான ஸ்கேன் செயல் முறைக்கு உங்கள் உடலை உட்படுத்தும் போது அதிக சக்தி வாய்ந்த கட்டுப்படுத்தப்பட்ட காந்த அலைகள், ரேடியோ அலைகள் மற்றும் கணினி தொழில்நுட்பத்தின் உதவியோடு நமது உடலுக்குள் இருக்கும் உறுப்புகளின் மிகத் தெளிவான படத்தை நம்மால் எடுக்க முடியும். இதன் மூலம் நமது உடலில் எந்த இடத்தில் பிரச்சனை இருக்கிறது என்பதையும் அதை எவ்வாறு சரி செய்ய முடியும் என்பதையும் நம்மால் கண்டறிய இயலும். இந்த முறையில் நமது உடல் உறுப்புக்கள் மற்றும் திசுக்களின் தெளிவான படத்தை நம்மால் பார்க்க முடியும்.

    MORE
    GALLERIES

  • 27

    எம்ஆர்ஐ ஸ்கேன் ஏன் எடுக்கிறார்கள் தெரியுமா..? எந்தெந்த நோய்களுக்கு கட்டாயம் தேவை..?

    இதைப் பற்றி பேசிய மருத்துவ வல்லுனர் கூறுகையில் எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் நமது உடற்கூறினுடைய முப்பரிமான படத்தை நம்மால் பெற முடியும். எக்ஸ்ரேவிற்கு பதிலாக காந்த அலைகளும், ரேடியோ அலைகளையும் பயன்படுத்தி ஸ்கேன் செய்யப்படுகிறது. பெரும்பாலான எம்ஆர்ஐ மிஷின்கள் பார்ப்பதற்கு பெரியதாகவே இருக்கும். அவற்றில் டியூப் வடிவிலான காந்தங்கள் பொருத்தப்பட்டு இருக்கும். இதில் உள்ள நல்ல விஷயமே எம்ஆர்ஐ ஸ்கேன் செய்வதினால் நமக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது ஏனெனில் இதிலிருந்து எந்த விதமான கதிர்வீச்சும் வெளிப்படுவதில்லை.

    MORE
    GALLERIES

  • 37

    எம்ஆர்ஐ ஸ்கேன் ஏன் எடுக்கிறார்கள் தெரியுமா..? எந்தெந்த நோய்களுக்கு கட்டாயம் தேவை..?

    எம்ஆர்ஐ ஸ்கேன் எதற்கு பயன்படுத்தலாம்? எலும்புகள் மற்றும் மூட்டு இணைப்புகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், இதயத்தில் ஏற்பட்டுள்ள கோளாறுகள், மார்பக புற்றுநோய், முதுகு தண்டு மற்றும் மூலையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், கருப்பை பாதிப்புகள் கல்லீரல் புற்றுநோய் பாதிப்புகள், குழந்தை பேருக்காக சிகிச்சை பெறும் பெண்கள் மேலும் உடலில் பல பாகங்களில் உள்ள பிரச்சனைகளை கண்டறிவதற்கு எம்ஆர்ஐ ஸ்கேன் பயன்படுத்தப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 47

    எம்ஆர்ஐ ஸ்கேன் ஏன் எடுக்கிறார்கள் தெரியுமா..? எந்தெந்த நோய்களுக்கு கட்டாயம் தேவை..?

    இதன் செயல்முறை என்ன? நீங்கள் எவ்வாறு ஸ்கேன் எடுப்பதற்கு முன்னர் உங்கள் உடலில் இருக்கும் உலோக ஆபரணங்கள் போன்ற உலோகங்கள் சம்பந்தப்பட்ட அனைத்தையும் நீக்கிவிட வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு அளிக்கப்படும் மருத்துவமனையின் உடையை அணிந்து கொண்டு உங்களை கிடைமட்டமாக படுக்க வைத்து, பின்னர் அந்த எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரத்திற்குள் அனுப்பப்படுவீர்கள். உங்களது காலோ அல்லது தலையோ முதலில் உள்ளே செல்லும் வண்ணம் நீங்கள் அந்த இயந்திரத்திற்குள் அனுப்பப்படுவீர்கள். எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யும் போது உங்களது உடலில் இருக்கும் நீர் மூலக்கூறுகள் மாற்றி அமைக்கப்படும் மேலும் ரேடியோ அலைகளின் மூலமும் உங்களுக்கு மயக்கம் வருவது போன்ற ஒரு உணர்வு உண்டாகலாம்.

    MORE
    GALLERIES

  • 57

    எம்ஆர்ஐ ஸ்கேன் ஏன் எடுக்கிறார்கள் தெரியுமா..? எந்தெந்த நோய்களுக்கு கட்டாயம் தேவை..?

    இந்த செயல்முறையின் மூலம் உங்களது உடல் உறுப்புகளின் குறுக்கு வெட்டு தோற்றங்களை மிகத் தெளிவாக படம் பிடிக்க முடியும். மிகத் தெளிவான படத்தை பெறுவதற்கு ஸ்கேன் செய்யும் சமயத்தில் அசையாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் படம் தெளிவாக வரும். நீங்கள் உள்ளே இருக்கும்போது மிக அதிக அளவிலான சத்தத்தை உணரலாம். அதனால் உங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது.

    MORE
    GALLERIES

  • 67

    எம்ஆர்ஐ ஸ்கேன் ஏன் எடுக்கிறார்கள் தெரியுமா..? எந்தெந்த நோய்களுக்கு கட்டாயம் தேவை..?

    ஸ்கேன் எடுத்தபின் நடக்கும் செயல்முறை : உடலின் எந்த பாகத்தை ஸ்கேன் செய்கிறீர்கள் என்பதையும் எத்தனை விதமான படங்கள் தேவைப்படுகிறது என்பதையும் பொறுத்து இந்த செயல்முறையானது 15 லிருந்து 60 நிமிடங்கள் வரை நீடிக்கலாம். ஸ்கேன் செய்து முடித்த பிறகு மருத்துவ வல்லுநர் உங்களது அறிக்கைகளை பார்த்து உங்களுக்கு என்ன பாதிப்புகள் உள்ளது என்ன விதமான பிரச்சினைகள் உள்ளது என்பதையும் அதற்கு என்ன தீர்வு என்பதையும் அறிவுறுத்துவார்கள்.

    MORE
    GALLERIES

  • 77

    எம்ஆர்ஐ ஸ்கேன் ஏன் எடுக்கிறார்கள் தெரியுமா..? எந்தெந்த நோய்களுக்கு கட்டாயம் தேவை..?

    எம் ஆர் ஐ ஸ்கேனின் நன்மைகள் : இந்த ஸ்கேன் செயல்முறை அதிக ஆக்கிரமிப்பு அல்லாத மற்றும் வலியற்ற ஒரு செயல்முறை ஆகும். மேலும் இதில் எந்தவிதமான கதிர்வீச்சுகளும் உங்களது உடலை பாதிக்காது. உடல் உறுப்புகளின் மென் திசுக்களை கூட இந்த ஸ்கேன் செய்முறை மூலம் உங்களால் கண்டறிய முடியும். புற்றுநோய், இதய கோளாறுகள், தசை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எலும்புகள் ஏற்படும் குறைபாடுகள் போன்ற பலவிதமான நோய்களை இதன் மூலம் நம்மால் கண்டறிய இயலும்.

    MORE
    GALLERIES