நீண்ட நேரம் இருக்கையில் அமர்ந்து கொண்டு வேலை செய்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு முதுகு வலி ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகம். இன்றைய நிலையில் அலுவலகங்களில் வேலை பார்க்கும் பலருக்கும் இந்த முதுகு வலி பிரச்சனை இருந்து வருகிறது. முதுகு வலி பிரச்சனை மட்டுமின்றி கழுத்து வலி, மூட்டு வலி போன்ற பல்வேறு வித பிரச்சனைகளால் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
முக்கியமாக முதுகு வலி தீவிரமடையும் பட்சத்தில் உங்களால் அலுவலக வேலைகளை சரியாக பார்க்க முடியாமல் போவதோடு தனிப்பட்ட வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் அது பெரும் தடையாக இருக்கும். மேலும் பலர் முதுகு வலியிலிருந்து தப்பிப்பதற்காக வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் இதுவும் கூட நிரந்தர தீர்வாக அமையாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றிற்கு பதிலாக சில விஷயங்களை நாம் பின்பற்றினாலே நாள்பட்ட முதுகு வலி சரி செய்வதோடு முதுகு வலி ஏற்படாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
சரியான அளவு நீர் அருந்தாமல் இருத்தல் : நம் உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருந்தால் அதை நமது மூட்டுக்கள் உராய்வதை மென்மையாக்கி மூட்டு வலி ஏற்படுவதை தடுக்க உதவுகிறது. இதுவே நீர் சத்து குறையும் பட்சத்தில், மூட்டுகளில் உராய்வானது அதிகரித்து அது நீண்ட காலத்திற்கு மூட்டு வலியை கொடுக்கும். எனவே முடிந்த அளவு உங்களுடன் எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொண்டு சரியான இடைவெளியில் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பது நன்மையை தரும்.
அதிக அளவிலான இனிப்பு வகைகளை உட்கொள்வது : நீங்கள் அதிகம் இனிப்பு உணவு வகைகளை உட்கொள்பவராக இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு வெகு விரைவிலேயே முதுகு வலி ஏற்படும். குறிப்பாக பலர் அலுவலகங்களில் வேலை பார்க்கும் போது அதிக அளவில் இனிப்புகளை உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உடலில் அதிக அளவில் சர்க்கரை சேரும்போது, அவை அழற்சி தன்மையை உண்டாக்கி உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை தடுக்கிறது.
நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே வேலை செய்வது : எங்கும் நகராமல் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு வேலை செய்வது கண்டிப்பாக முதுகு வலியை உண்டாக்கும். எனவே முடிந்த அளவு கிடைக்கும் இடைவேளைகளில் எல்லாம் உடல் இயக்கத்தை அதிகப்படுத்த வேண்டும். ஒவ்வொரு 45 நிமிடத்திற்கும் குறைந்தது 10 நிமிடம் ஆவது உடல் இயக்கத்தை மேற்கொள்வது முதுகு வலி ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும். கிடைக்கும் இடைவேளைகளில் நடை பயிற்சி செய்வதன் மூலமும் நமது தசைகள் நன்றாக விரிவடைந்து முதுகு வலி ஏற்படுவதை தடுக்கும்.
மன அழுத்தம் : எப்போதும் உங்களது உடலும் உள்ளமும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்தது என்பது நினைவில் கொள்ளவும். உங்கள் மனதளவில் அதிக அழுத்தமாக உணர்ந்தால் அது கண்டிப்பாக உடல் இடும் பாதிப்பை உண்டாக்கும். நீங்கள் அதிக அளவிற்கு மன அழுத்தத்திற்கு உண்டாகும் போது அவை முதுகுப் பகுதியில் உள்ள தசைகளில் பாதிப்பை ஏற்படுத்தி முதுகு தண்டு வலியை உண்டாக்கும்.
பொதுவாகவே அலுவலகத்தில் அதிக அளவிலான வேலை பணியை சந்திப்பவர்களுக்கு முதுகு வலி பிரச்சனை இருக்கிறது. மேலும் சரியான கருத்து பரிமாற்றம் உண்மை சீரற்ற நிர்வாகம் ஆகியவையும் பலருக்கும் மன அழுத்தத்தை கொடுக்கிறது. முடிந்த அளவு இவற்றிலிருந்து விலகி இருப்பதன் மூலம் முதுகு வலி பிரச்சனையிலிருந்து நம்மால் நம்மை பாதுகாத்துக் கொள்ளும்.