மெட்டாஸ்டேடிக் புற்றுநோய் என்பது உடலின் எல்லா பகுதிக்கும் தீவிரமாக பரவி, மரணத்திற்கு வழிவகுக்க கூடியது. இது நிலை 4 புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது. மெட்டாஸ்டேடிக் புற்றுநோய் சில நேரங்களில் மிக வேகமாகவும் பரவுகிறது. இது எங்கிருந்து தொடங்கியது என்பதை மருத்துவர்களால் கூட கண்டறிய முடியாது. நேஷனல் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டின் கூற்றுப்படி, மெட்டாஸ்டேடிக் புற்றுநோய் செல்கள் வேறு எந்த புற்றுநோயையும் போன்ற அம்சங்களை கொண்டிருப்பதில்லை.
மெட்டாஸ்டேடிக்கை தடுப்பதற்கு மருந்துகள் மற்றும் இதர மருத்துவ முறைகளை கண்டறிய வல்லுநர்கள் பல வழிகள் முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில், டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியின் ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஒரு புதிய ஆய்வு, மெட்டாஸ்டேடிக் புற்றுநோயைத் தடுக்க ஒரு அற்புதமான செயல்பாட்டு வழியை வழங்கியுள்ளது. அதாவது, இந்த செயல்பாட்டை உடற்பயிற்சி மூலம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று கண்டறிந்துள்ளனர். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, ஏரோபிக்ஸ், ஜூம்பா, ஓட்டப்பயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற அதிக தீவிரம் கொண்ட பயிற்சிகள் மெட்டாஸ்டேடிக் புற்றுநோய் அபாயத்தை 72 சதவீதம் வரை குறைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
எவ்வாறு தடுக்கிறது? பல ஆய்வுகள் உடற்பயிற்சிகள் மற்றும் அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் 35 சதவிகிதம் வரை புற்றுநோய் பாதிப்புகளை குறைக்க முடியும். இந்த தீவிர உடற்பயிற்சியானது உட்புற உறுப்புகளின் குளுக்கோஸ் நுகர்வை அதிகரிக்கிறது. எனவே, இந்த ஆய்வின் மூலம் மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால், 'சுறுசுறுப்பாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள்', ஏரோபிக் பயிற்சி என்பது மிகவும் தீவிரமான மற்றும் மெட்டாஸ்டேடிக் வகை புற்றுநோயைத் தடுப்பதை உறுதி செய்கிறது" என்று இந்த ஆய்வின் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
எங்கு அதிகம் பரவுகிறது? ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, மெட்டாஸ்டேடிக் புற்றுநோய் பொதுவாக நுரையீரல், கல்லீரல் மற்றும் நிணநீர் முனைகளில் உருவாகிறது. ஏனெனில் இந்த உறுப்புகளின் செல்கள் அதிக தீவிரம் கொண்ட செயல்பாட்டின் போது குளுக்கோஸ் ஏற்பிகளின் எண்ணிக்கையில் அதிகரிக்கிறது. மேலும், குளுக்கோஸின் மீதான கடுமையான போட்டி மெட்டாஸ்டாசிஸுக்கு முக்கியமான ஆற்றல் கிடைப்பதைக் குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
ஏரோபிக்ஸ் : அதிக தீவிரம் கொண்ட கார்டியோ பயிற்சிகளில் ஒன்றான ஏரோபிக்ஸ் உங்கள் கைகள், கால்கள் மற்றும் இடுப்பில் உள்ள பெரிய தசைகளை பயிற்சி செய்ய உதவுகிறது. இந்த பயிற்சி உங்கள் இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கிறது, இதயத்தை வேகமாக துடிக்கச் செய்கிறது, மேலும் உங்கள் தசைகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ஏரோபிக்ஸ் மூலம், உங்கள் உடல் எண்டோர்பின்கள், இயற்கை வலி நிவாரணிகளை வெளியிடுகிறது. எனவே, உடலின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு : கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள உதவிக்குறிப்புகள் மற்றும் பரிந்துரைகள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு உடற்பயிற்சி திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் அல்லது உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகவும்.