சுய இன்பம் காணுதல் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பங்களுக்கு உட்பட்டது. ஆனால் அவ்வாறு செய்வது செக்ஸ் அழுத்தத்தை குறைக்க உதவுவதாக மருத்துவர்களே இதை பரிந்துரை செய்கின்றனர். இந்நிலையில் ஹார்டுவேர் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வில் அடிக்கடி சுய இன்பம் காணும் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை தடுக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது யூரோபியன் யூராலஜி என்னும் இதழில் 2016 ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு கிட்டத்தட்ட 18 வருடங்கள் நடத்தப்பட்டுள்ளது. அதுவும் புரோஸ்டேட் புற்றுநோய் அறிகுறி கொண்டவர்களை வைத்தே இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. 20 வயதில் அவர்களுக்கு சில பரிந்துரைகள் மற்றும் கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளது. பின் அவர்கள் 40 வயதை அடைந்த பின் அவர்களின் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு செய்த பரிசோதனையில் அவர்களுக்கு புற்றுநோய் செல்களின் வளர்ச்சி குறைந்தது, மேற்கொண்டு அது அதிகரிக்காமல் இருந்ததும் தெரிய வந்துள்ளது.
இறுதியாக இந்த ஆய்வு முடிவுக்கு வந்தாலும் ஆர்கசம் (orgasms) எப்படி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது என்னும் காரணத்தை புரிந்துகொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளனர். அந்த ஆய்வு படி அடிக்கடி விந்துவை வெளியேற்றுவதால் பாக்டீரியாக்கள் மற்றும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் அவற்றின் மூலம் உருவாகக் கூடிய புரோஸ்டேட் புற்றுநோய் தடுக்கப்படுகிறது. அதேசமயம் புரோஸ்டேட் புற்றுநோயை தவிர்க்க சுய இன்பம் காணுதல் மட்டுமே தீர்வு கிடையாது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
ஆரோக்கியமான உணவு முறை , 8 மணி நேரம் சீரான தூக்கம், உடற்பயிற்சி போன்ற உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்கும் பழக்கங்களை பின்பற்றுவதும் அவசியம் என்கின்றனர். தாரவ அடிப்படையிலான உணவு முறை, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த மீன் உணவுகளை அதிகமாக சாப்பிட பரிந்துரைக்கின்றனர். இதன் ஆய்வாளர் இயன் கெர்னர்” ஒவ்வொருவரும் சிவப்பு உணவுகளான தக்காளி, சிவப்பு திராட்சை , ஆப்பிள் என சிவப்பாக இருக்கும் உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்” என பரிந்துரைக்கிறார். சோயா உணவுகளையும் சாப்பிட வேண்டும் என்கிறார். இதோடு கூடிய கடுமையான உடற்பயிற்சி புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்திலிருந்து தப்பிக்க உதவுகிறது.