கொரோனா , ஒர்க் ஃபிரம் ஹோம் , பரபரப்பான அலுவலக வேலை, இப்படி நம் மன அழுத்தத்தை தூண்டும் விஷயங்கள் தினசரி நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் அதிலிருந்து சற்று விலகி நமக்காக சில விஷயங்களை செய்தால்தான் நம் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். உடல் நலம் எந்த அளவு முக்கியமோ அதேபோல் மன ஆரோக்கியமும் அவசியம். அந்த வகையில் உங்களை துரத்தும் மன அழுத்தத்தை எதிர்கொள்ள வீட்டிலேயே ரிலாக்ஸாக இருக்கும்போது இந்த விஷயங்களை செய்யுங்கள். மனம் சற்று ரிலாக்ஸாகும். மறுநாள் மீண்டும் தொய்வு இன்றி ஓடத் தொடங்குவீர்கள்.