முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் ஆண்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்...

குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் ஆண்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்...

குழந்தைகளை பெற்று கொள்வதற்கு பெண்களின் வயதை போலவே ஆண்களின் வயதும் முக்கியமானதே. இதற்குக் காரணம் வயது ஏற ஏற ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையும் அதன் தரமும் குறைய தொடங்குகிறது.

 • 17

  குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் ஆண்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்...

  பெரும்பாலும் பெண்களுக்கு குழந்தைகளை பெற சரியான வயது இருப்பதாக நம்பப்படுகிறது. அதே நேரத்தில் ஆண்கள் எந்த வயதிலும் குழந்தைகளை பெறலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. எனினும் இது முற்றிலும் உண்மை இல்லை.

  MORE
  GALLERIES

 • 27

  குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் ஆண்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்...

  குழந்தைகளை பெற்று கொள்வதற்கு பெண்களின் வயதை போலவே ஆண்களின் வயதும் முக்கியமானதே. இதற்குக் காரணம் வயது ஏற ஏற ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையும் அதன் தரமும் குறைய தொடங்குகிறது. நீங்களும் உங்கள் மனைவியும் குழந்தை பெற்று கொள்ள திட்டமிட்டு வருகிறீர்களா.! கருத்தரிப்பது பெண்ணாக இருந்தாலும் கர்ப்பத்தை உருவாக்குவதில் ஆணின் பங்கு முக்கியமானது. பெண் கருத்தரிக்க ஆணின் விந்தணுக்கள் ஆரோக்கியமாகவும், பெண்ணின் முட்டையை ஊடுருவி செல்லும் அளவுக்கு வலுவாகவும் இருக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 37

  குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் ஆண்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்...

  உங்கள் மனைவியின் ஓவலேஷன் பீரியட்டின் போது நீங்கள் அவருடன் உடலுறவு கொள்வது கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும். எனினும் விரைவில் நீங்கள் தந்தையாகும் வாய்ப்புகளை மேம்படுத்த உதவும் ஆரோக்கிய வாழ்க்கை முறை மாற்றங்களை இங்கே பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 47

  குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் ஆண்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்...

  விந்தணுவின் வெப்பநிலை.. உங்கள் விந்தணுக்களின் தரத்தை நல்லபடியாக வைத்திருக்க உங்கள் விந்தணுக்களை குளிர்ச்சியாக வைத்திருப்பது முக்கியம். நீங்கள் பார்க்கும் வேலை வெப்பமான சூழலில் செய்யும் ஒன்றாக இருந்தால், அவ்வப்போது நீங்கள் எடுத்து கொள்ளும் பிரேக் குளிர்ச்சியான இடத்தில் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். நீண்ட நேரம் உட்கார்ந்தே பார்க்கும் வேலை என்றால், அவ்வப்போது எழுந்து நடப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். இறுக்கமான உள்ளாடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 57

  குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் ஆண்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்...

  புகை மற்றும் மது பழக்கம் கூடாது.. புகை பழக்கம் உங்களது கருவுற வைக்கும் திறனை குறைக்கலாம். புகைபிடித்தல் ஹார்மோன் உற்பத்தியை எதிர்மறையாக பாதித்து உங்கள் இனப்பெருக்க அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் இப்பழக்கம் விந்தணுவில் உள்ள டிஎன்ஏவை சேதப்படுத்தும். SAGE ஜர்னல்ஸில் வெளியிடப்பட்ட ஆய்வில், அதிக புகை பழக்கம் விந்தணு எண்ணிக்கை குறைவதோடு தொடர்புடையது என்று கண்டறியப்பட்டது. மிதமான மற்றும் அதிக மது அருந்தும் பழக்கம் உருவவியல் ரீதியாக அசாதாரண விந்தணுக்களின் அதிகரிப்புடன் தொடர்புடையது என்பதையும் அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. எனவே உங்களிடம் புகை மற்றும் மது பழக்கம் இருப்பின் அதை கைவிடுவது நல்லது.

  MORE
  GALLERIES

 • 67

  குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் ஆண்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்...

  ஆரோக்கியமான உணவுகள்... உங்கள் விந்தணுவை நல்ல நிலையில் வைத்திருக்க சீரான உணவை சாப்பிடுவது மற்றும் ஆரோக்கிய எடையை பராமரிப்பதும் அவசியம். ஒவ்வொரு நாளும் பழங்கள், காய்கறிகள், உருளைக்கிழங்கு, ரொட்டி, அரிசி அல்லது பாஸ்தா போன்ற அதிக நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவது இதில் அடங்கும். உங்கள் டயட்டில் பீன்ஸ், பருப்பு வகைகள், மீன், முட்டை, இறைச்சி மற்றும் பால் சேர்த்து கொள்ளுங்கள். அதிக எடை விந்தணுவின் தரம் மற்றும் அளவை பாதிக்கும் என்பதால் நீங்கள் பருமனாக இருந்தால் 5 முதல் 8 கிலோ வரை எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுங்கள்.

  MORE
  GALLERIES

 • 77

  குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் ஆண்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்...

  மன அழுத்தத்தை தவிர்க்கவும்.. நீங்கள் தந்தையாகும் முயற்சியில் இருந்தால் மேலே சொன்ன எல்லாவற்றையும் விட ஒருபடி முக்கியம் மன அழுத்தம் இல்லாமல் இருப்பது. மன அழுத்தம் செக்ஸ் மீதான உங்கள் ஆர்வத்தை குறைக்கும். இதன் மூலம் உங்கள் கருத்தரிக்கும் வாய்ப்புகள் குறையலாம். கடும் மன அழுத்தம் விந்தணு உற்பத்தியை குறைக்க கூடும். எனவே உங்கள் மனைவியை கர்ப்பம் தரிக்க வைக்க முயற்சிக்கும் போது, மன அழுத்தத்தை குறைக்க மற்றும் நிர்வகிக்க கற்று கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES