ரத்த அணுக்கள் உற்பத்தி, உடல் ஆற்றல், சோர்வின்மை, பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு இன்றியமையாத மற்றும் அடிப்படையான உடல் செயல்பாடுகளுக்கு இரும்புச் சத்து மிகவும் அவசியம். இந்திய முழுவதும் இரும்புச்சத்துக் குறைபாட்டால் 70 சதவிகித குழந்தைகள் மற்றும் 65 சதவிகித பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஹீமோகுளோபின் என்பது இரும்புச்சத்தில் காணப்படும் ஒரு வகையான புரதம் ஆகும். ஹீமோகுளோபின்தான் உடல் முழுவதும் ரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது. எனவே இரும்புச்சத்துக் குறைவாக, அதாவது ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. போர்டிஸ் மருத்துவமனையின் டாக்டர் மனோஜ் கே அஹூஜா அவர்கள் கூறியபடி ஹீமோகுளோபின் குறிப்படி, சோர்வு, பலவீனம், தலைவலி, மூச்சுத்திணறல் மற்றும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். அதுமட்டுமின்றி ஹீமோகுளோபின் அளவு தொடர்ச்சியாக குறைவாகவே இருந்தால், கடுமையான அனீமியா நோய் பாதிப்புக்கு வழி வகுக்கும் என்று தெரிவித்துள்ளார். ஹீமோகுளோபின் குறைபாட்டை நீக்க, ஊட்டச்சத்து நிபுணர்கள் அங்கீகரித்த 5 இரும்புச் சத்து உணவு வகைகளின் பட்டியல் இங்கே.
சிறுகீரை : தண்டுக்கீரை அல்லது சிறுகீரை என்று கூறப்படும் கீரைவகை தான் அமராந்த் என்று பரவலாக அழைக்கப்படுகிறது. இந்தக் கீரையில் இரும்புச்சத்து, புரதம் மற்றும் கால்சியம் ஆகிய மூன்று சத்துக்களும் நிறைந்துள்ளன. பல வகைகளில் விளைவிக்கப்படும் இதில், சிவப்பு நிறத்தில் இருக்கும் கீரை வகை அதிக இரும்புச் சத்தை கொண்டுள்ளது. கீரையைப் பொரியல், கூட்டு, அடை அல்லது சூப்பாக சாப்பிடலாம்.
வெல்லம் : பொதுவாக இரும்புச்சத்து உணவுகள் என்று வரும்போது வெல்லத்தைப் பெரும்பாலானவர்கள் மறந்துவிடுகிறார்கள். வெல்லம், சர்க்கரையைப் போல சத்தே இல்லாத அதிக கலோரிகள் கொண்ட இனிப்பு இல்லை. வெல்லத்தில் இரும்புசத்து மட்டுமல்லாமல் அத்தியாவசியமான தாதுக்களான மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய இரண்டுமே உள்ளது. மேலும், வெல்லம் சாப்பிடுவது செரிமானத்துக்கும் உதவுகிறது மட்டுமின்றி பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலிக்கு தீர்வாகவும் அமைகிறது.
இரும்பு பாத்திரங்களில் சமைப்பது : சில ஆண்டுகளுக்கு முன் வரை பல்வேறு உலோகங்களால் ஆன பாத்திரங்கள் சமையலுக்கு பயன்படுத்தப்பட்ன. உதாரணமாக, மண்சட்டியில் சமைப்பது உடலுக்குத் தேவையான கால்சியம் சத்தைக் கொடுக்கும். அதே போல இரும்பு வாணலியில் சமைப்பது அல்லது இரும்புக் கடாயில் தோசை செய்வது உட்பட இரும்புப் பாத்திரங்கள் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தைக் கொடுக்கும். எனவே உடலில் இரும்பு சத்து அதிகரித்து, ஹீமோகுளோபின் குறைபாட்டைப் போக்க இரும்பு பாத்திரங்களில் சமைக்க வேண்டும்.
வைட்டமின் சி உணவுகளை சேர்க்க வேண்டும் : பொதுவாகவே ஒவ்வொரு ஊட்டச்சத்தும் மற்றொரு ஊட்டச்சத்தை சார்ந்து தான் இருக்கின்றது. உடலில் கால்சியம் உறிஞ்சப்பட, வைட்டமின் டி தேவை. அதைப்போல உடலில் இரும்புச்சத்து உறிஞ்சப்பட்ட வேண்டும் என்றால் வைட்டமின்-சி தேவை. நீங்கள் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தாலும் வைட்டமின்-சி குறைவாக இருந்தால் உடலுக்கு தேவையான ஹீமோகுளோபின் கிடைக்காது.