இதை கோவிட்டுக்கு பிந்தைய நிலை (post COVID condition) என்று உலக சுகாதார மையமும், லாங் கோவிட் கண்டிஷன் (long COVID condition) என சுகாதார நிபுணர்களும் குறிப்பிடுகின்றனர். அறிகுறிகள் அதிக நாட்கள் நீடிக்கும் போது அதீத சோர்வு, சுவை அல்லது வாசனை இழப்பு, பிரெயின் ஃபாக் உள்ளிட்ட சிக்கல்கள் பாதிப்பட்டுள்ள நபருக்கு விரக்தி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.
லாங் கோவிட் காரணமாக ஏற்படும் அறிகுறிகளின் தாக்கத்தைக் குறைக்க, ஒருவர் பின்பற்ற வேண்டிய முக்கியமான ஒன்று ஆரோக்கியமான டயட். தொற்றால் பாதிக்கப்பட்டு பல நாட்களாகியும் சில றிகுறிகள் நீடித்தால் ஆரோக்கியமான உணவுகள் அதிலிருந்து விடுபட தீர்வாக இருக்கும். லாங் கோவிட் அறிகுறிகளை குறைத்து மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்ப நிபுணர்களின் பரிந்துரைகளை இங்கே காணலாம்.
மாவுச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட்ஸ்: தொற்றிலிருந்து மீளும் போதும், அதன் பின்னரும் மக்கள் பொதுவாக ஆற்றல் வெகுவாக குறைந்தது போல உணர்வார்கள். எனவே எனர்ஜி லெவலை அதிகரிக்க, உருளைக்கிழங்கு, அரிசி, ரொட்டி, பாஸ்தா அல்லது பிற மாவுச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட்ஸ் அடங்கிய உணவுகளை டயட்டில் சேர்க்க வேண்டும். முழு கோதுமை, முழு ஓட்ஸ், தினை மற்றும் முழு பார்லி போன்ற முழு தானிய கார்போஹைட்ரேட்டுகளை சேர்க்கலாம். இவற்றில் நார்ச்சத்து அதிகம் மற்றும் மெதுவான மற்றும் சீரான வேகத்தில் ஆற்றலை வழங்குவதால் சோர்வை போக்கி உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது.
ஃபிரெஷ்ஷான பழங்கள்: தினமும் 5 முறை பழங்களை சாப்பிடுவது ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியம், ஆற்றல் மற்றும் மனநிலையில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தும். ஃபிரெஷ்ஷான பழங்களில் உடலுக்கு மிகவும் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் அடங்கியுள்ளன. ஒரு ஆப்பிள், பேரிக்காய் அல்லது பிளம் உள்ளிட்ட பழங்களுடன் நாளை துவங்கலாம். காலை மற்றும் மதிய உணவிற்கு இடையில் பழங்களை எடுத்து கொள்ளலாம். மாலையிலும் ஃபிரெஷ்ஷான பழங்களை சாப்பிடுவதன் மூலம் புத்துணர்ச்சியாக உணரலாம்.
வளமான புரத உணவுகள்: பீன்ஸ், பருப்பு வகைகள், நட்ஸ், சீட்ஸ், மீன், முட்டை மற்றும் இறைச்சி ஆகியவை புரதத்தின் நல்ல வளமான ஆதாரங்கள். பால், சீஸ் மற்றும் தயிர் ஆகியவை புரதம், கால்சியம் மற்றும் வைட்டமின்களின் வளமான ஆதாரங்களாகும். அதே போல பதப்படுத்தப்பட்ட இறைச்சியை விட வீட்டில் செய்யப்படும் அசைவ உணவுகள் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்கவும், ஆரோக்கியமான உடலை மீட்டெடுக்க உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கவும் புரதம் பெரிதும் உதவும்.
ஆரோக்கிய கொழுப்புகள்: ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் செல் சுவர்களை பலப்படுத்துகிறது மற்றும் வைரஸ், நோய்கிருமி அல்லது பாக்டீரியா படையெடுப்புக்கு எதிராக வலுவான நோயெதிர்ப்பு சக்தியை வெளிப்படுத்த உதவுகிறது. ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் பெறுவதற்கு சால்மன் அல்லது மத்தி போன்ற மீன்களை வாரத்திற்கு 2 முறை சாப்பிடலாம். நீங்கள் சைவமாக இருந்தால், நட்ஸ், சீட்ஸ் மற்றும் சோயா போன்ற தாவர அடிப்படையிலான உணவுகளை டயட்டில் சேர்க்கலாம்.
அதிகம் திரவம் சேர்க்கவும்: தண்ணீர் உட்பட தினமும் நிறைய திரவங்களை குடிபாப்பது ஆற்றலை அதிகரிக்க உதவும். உடலை நீரேற்றமாக வைப்பது தொற்றின் நச்சுகளை உடலில் இருந்து அகற்ற உதவுகிறது. உடலில் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்து விநியோகத்திற்கும் தண்ணீர் உதவுகிறது. தண்ணீர் தவிர சூப்கள், பால், ஜூஸ் மற்றும் ஸ்மூத்திகளையும் எடுக்கலாம்.