முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » சர்க்கரை நோய் இருக்கா..? உடனே உங்க துணையுடன் சேர்ந்து இருங்க.. ஆய்வு சொன்ன தகவல்

சர்க்கரை நோய் இருக்கா..? உடனே உங்க துணையுடன் சேர்ந்து இருங்க.. ஆய்வு சொன்ன தகவல்

இன்சுலின் எதிர்ப்பு, ஒப்பீட்டளவில் இன்சுலின் குறைபாடு ஆகியவற்றின் காரணமாக நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை அளவுகளை அதிகப்படுத்தும் ஒரு வளர்சிதைமாற்ற நோயாகவும் டைப் 2 நீரழிவு நோய் உள்ளது.

  • 15

    சர்க்கரை நோய் இருக்கா..? உடனே உங்க துணையுடன் சேர்ந்து இருங்க.. ஆய்வு சொன்ன தகவல்

    இன்றைக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாரபட்சம் பார்க்காமல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொதுவான நோய்களில் ஒன்றாகிவிட்டது சர்க்கரை நோய். டைப் 1, டைப் 2 என இந்நோயில் பல வகைகள் இருந்தாலும் டைப் 2 நீரழிவு நோய் என்பது மிகவும் பொதுவான ஒன்றாக உள்ளது. இன்சுலின் எதிர்ப்பு, ஒப்பீட்டளவில் இன்சுலின் குறைபாடு ஆகியவற்றின் காரணமாக நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை அளவுகளை அதிகப்படுத்தும் ஒரு வளர்சிதைமாற்ற நோயாகவும் டைப் 2 நீரழிவு நோய் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 25

    சர்க்கரை நோய் இருக்கா..? உடனே உங்க துணையுடன் சேர்ந்து இருங்க.. ஆய்வு சொன்ன தகவல்

    இது கடுமையான சிக்கல்களுடன் தொடர்புடையதோடு, நம்முடைய ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இதனால்தான் நீரழிவு நோய் வராமல் தடுப்பதற்காக இன்றைக்கு பெரும்பாலானோர் உடற்பயிற்சி மேற்கொள்வது, உணவுகளை குறைத்துக் கொள்வதோடு ஆரோக்கியமான உணவுகளின் மீது அதிக நாட்டம் காட்ட ஆரம்பித்துவிட்டனர். இவ்வாறு செய்தால் நீரழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பது தான் இதுவரை நமக்குத் தெரியும்.

    MORE
    GALLERIES

  • 35

    சர்க்கரை நோய் இருக்கா..? உடனே உங்க துணையுடன் சேர்ந்து இருங்க.. ஆய்வு சொன்ன தகவல்

    ஆனால் திருமணமான அல்லது உங்களுக்குப் பிடித்த காதல் உறவுகளுடன் சேர்ந்து வாழ்வது நீரழிவு நோயைத் தடுக்க உதவுகிறது என்பது யாருக்காவது தெரியுமா? இதுக்குறித்து ஆய்வும் நடத்தப்பட்டுள்ளதாம். ஆம் சமீபத்தில் நீரழிவு நோய் மற்றும் திருமண உறவுகள் குறித்த நடத்தப்பட்ட ஆய்வுக்குறித்து BMJ Open Diabetes Research & Care என்ற இதழில் ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஆய்வில் என்ன நடந்தது.? என்பது குறித்த சுவாரஸ்சிய தகவல்களை இங்கே நாமும் அறிந்துக் கொள்வோம்.

    MORE
    GALLERIES

  • 45

    சர்க்கரை நோய் இருக்கா..? உடனே உங்க துணையுடன் சேர்ந்து இருங்க.. ஆய்வு சொன்ன தகவல்

    ஆய்வில் நடந்தது என்ன  ? : சர்க்கரை நோய்க்கும், உறவுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்த ஆராய்ச்சியை லக்சம்பர்க் பல்கலைக்கழகம் மற்றும் கனடாவில் உள்ள ஒட்டாவா பல்கலைக்கழத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் நடத்தியுள்ளனர். இதில் குறிப்பிட்ட சில நபரிடம் இரத்தப்பரிசோதனை மற்றும் அவர்களின் வாழ்க்கை குறித்த தகவல்கள் கேட்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வெளியான ஆய்வின் முடிவில், 50 வயது முதல் 89 வயதிற்கு உட்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நீரழிவு நோய் இல்லை என்றும், அதில் 76 சதவீதம் பேர் திருமணமானவர்கள் அல்லது ஒன்றாக சேர்ந்து வாழ்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உறவின் தன்மை மற்றும் தரம் இரத்த குளுக்கோஸின் சராசரி அளவுகளில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 55

    சர்க்கரை நோய் இருக்கா..? உடனே உங்க துணையுடன் சேர்ந்து இருங்க.. ஆய்வு சொன்ன தகவல்

    இதோடு திருமண அல்லது காதல் உறவுகளின் ஆதரவு ஆகியவற்றின் பரிமாணங்களைப் பொருட்படுத்தாமல் HbA1C அளவுகளுடன் நேர்மாறாக தொடர்புடையவை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் விவாகரத்து போன்ற திருமண மாற்றங்களை அனுபவித்தவரின் விரிவான பகுப்பாய்வையும் நிபுணர்கள் நடத்தினர். இதில் இந்த நபர்கள் தங்கள் HbA1C அளவுகள் மற்றும் நீரழிவு நோய்க்கு முந்தைய முரண்பாடுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அனுபவித்ததை அவர்கள் கண்டறிந்தது தெரியவந்துள்ளது. நீரிழிவு நோய் இல்லாத மற்றும் திருமண மாற்றத்தின் மூலம் உள்ளவர்களுக்கு கிளைசெமிக் அளவை மோசமாக்கும் அதிக ஆபத்தில் இருக்க நேரிடும் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    MORE
    GALLERIES