முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » ஆண்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்யலாம்..?

ஆண்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்யலாம்..?

ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 45 நிமிடங்களாவது உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். சைக்கிளிங் செல்வது, நீச்சலுக்கு செல்வது போன்ற எந்த விதத்திலாவது உடற்பயிற்சி மேற்கொள்வது மிகவும் முக்கியமானது. இதன் மூலம் ஆண்களின் டெஸ்ட்ரோஸ்டிரோன் அளவு அதிகரிப்பதோடு அவர்களது விந்தணுக்களின் தரமும் அதிகமாகிறது.

 • 17

  ஆண்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்யலாம்..?

  கொரோனா பெருந்தொற்றிற்கு பின் பலரது உடல் நலனிலும் பல்வேறு விதமான மாற்றங்கள் உண்டாகி உள்ளன. மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் முக்கியமாக சமீப காலத்தில் ஆண்களின் உயிரணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கையானது சராசரி அளவைவிட குறைவாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  MORE
  GALLERIES

 • 27

  ஆண்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்யலாம்..?

  இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கும் ஆண்கள் சில குறிப்பிட்ட வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் தங்கள் உயிரணுக்களின் எண்ணிகையை அதிகரிக்க முடியும். இந்த வகையில் உயிர் சக்தியை அதிகரிக்க ஆண்கள் கடைபிடிக்க வேண்டிய நான்கு வழிமுறைகளை பற்றி போது பார்ப்போம்.

  MORE
  GALLERIES

 • 37

  ஆண்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்யலாம்..?

  உடற்பயிற்சி: ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 45 நிமிடங்களாவது உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். சைக்கிளிங் செல்வது, நீச்சலுக்கு செல்வது போன்ற எந்த விதத்திலாவது உடற்பயிற்சி மேற்கொள்வது மிகவும் முக்கியமானது. இதன் மூலம் ஆண்களின் டெஸ்ட்ரோஸ்டிரோன் அளவு அதிகரிப்பதோடு அவர்களது விந்தணுக்களின் தரமும் அதிகமாகிறது.

  MORE
  GALLERIES

 • 47

  ஆண்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்யலாம்..?

  மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்: இன்றைய அதி வேகமான வாழ்க்கை முறையில் அனைவருமே மன அழுத்தத்தினால் அதிக அளவு பாதிக்கப்படுகிறார்கள். இது குறிப்பிட்ட அளவிற்கு மேல் செல்லும்போது ஆண்களின் உயிரணுக்களின் தரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, மலட்டு தன்மையையும் உண்டாக்குகிறது. மேலும் பாலுறவில் முழு மனதுடன் ஈடுபட முடியாத ஒரு நிலையை உண்டாக்கி விடுகிறது.

  MORE
  GALLERIES

 • 57

  ஆண்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்யலாம்..?

  அதிகளவிற்கு மன அழுத்தத்திற்கு உள்ளாகும் போது அவை கார்டிசால் சுரப்பதை அதிகப்படுத்தி, நேரடியாக டெஸ்ட்ரோஸ்டோன் சுரப்பதில் பாதிப்பை உண்டாக்குகிறது. எனவே முடிந்த அளவு மன அழுத்தத்தை குறைத்து நம் மனதை அமைதியாக வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும். இதைத் தவிர புகை பிடிப்பதும் ஆண்களின் உயிரணுக்களின் தரம் குறைவதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

  MORE
  GALLERIES

 • 67

  ஆண்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்யலாம்..?

  உடல் ஆரோக்கித்தை பேணி காக்க வேண்டும்: குறி விரைப்பின்மை, விரைவில் விந்து வெளியேறுதல் போன்ற பிரச்சனைகள் நீண்ட காலமாகவே சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு வந்த பிரச்சினைகளாகவும், சமீப காலங்களில் பல்வேறு தம்பதிகளுக்கு இடையே அதிக பிரச்சனைகள் உண்டாவதற்கும் காரணமாக உள்ளது. ஆனால் இதைப் பற்றி ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் சரியான புரிதலுடன் இருக்க வேண்டும். இவை மிக சாதாரணமான பிரச்சனைகள் ஆகும். மேலும் எளிய வழிமுறைகளை பின்பற்றியே நாம் இதனை சரி செய்து விட முடியும். இதைத் தவிர பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்வதுன் அவசியத்தை பற்றியும் விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 77

  ஆண்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்யலாம்..?

  உணவில் கவனம் தேவை: பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் துரித உணவுகள் ஆகியவை நமது உடலின் ஹார்மோன்களில் அதிக மாற்றங்களை ஏற்படுத்தி உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. முக்கியமாக ஆண்களின் விந்தணுக்களின் தரத்தையும் எண்ணிக்கையும் இவை பாதிக்கின்றன. இதை சரி செய்வதற்கு புரதச்சத்துக்கள், ஆன்டிஆக்சிடென்ட்ஸ், வைட்டமின் ஈ, மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும். முட்டைகள், பெரீஸ், வால்நட்ஸ், பச்சை காய்கறிகள் மற்றும் பழ வகைகள் ஆகியவற்றில் மேற்கூறிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

  MORE
  GALLERIES