உடல் எடையை குறைப்பது ஒன்றும் சாதாரண காரியம் அல்ல. நாம் உட்கொள்ளும் கலோரிகளின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். மிக தீவிரமான உடற்பயிற்சிகள் மற்றும் உணவுகளில் கட்டுப்பாடு என்று எண்ணற்ற வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டியிருக்கும்.ஆனாலும் கூட, உடல் எடையை குறைக்க முடியாமல் பலரும் திணறிக் கொண்டிருப்பார்கள். அதே சமயம், நமக்கு ஆச்சரியம் தரும் விஷயம் என்னவென்றால், பெரிய அளவுக்கு செலவுகளோ, சிரமங்களோ இல்லாமல் கீரைகளையும், இலைகளையும் கொண்டு உடல் எடையை நம்மால் குறைக்க முடியும் என்பதுதான்.
கறிவேப்பிலை : தென்னிந்திய சமையல் முறைகளில் மிக முக்கியமான சமையல் பொருள் கறிவேப்பிலை ஆகும். உணவுகளுக்கு நல்ல மனம் தரக் கூடியது. அதிகாலை நேரத்தில் இந்த கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் மென்று தின்றால் உடல் எடை குறையும். இது மட்டுமல்லாமல் உடலில் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும். அதனுடன் ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யும்.
ஓமவள்ளி : செரிமானக் கோளாறு, வயிற்றுவலி என்றால் உடனடியாக நம் பாட்டி பரிந்துரைக்கும் வைத்தியம் ஓமநீர் தான். அந்த அளவுக்கு மருத்துவ குணம் வாய்ந்தது. மலச்சிக்கலுக்கும் தீர்வு தருகிறது. இந்த இலையை சாப்பிடும்போது நம் உடலில் இன்சுலின் சுரப்பு சீராக இருக்கிறது. இதனால், ரத்த சர்க்கரை கட்டுப்படும். அதே சமயம், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
கொத்தமல்லி : நம் இந்திய சமையலில் நாம் எந்த உணவை தயாரித்தாலும் அதில் தவறாமல் இடம்பெறுவது தனியா என்னும் மல்லித்தூள் ஆகும். இது கொத்தமல்லி செடிகளில் இருந்து விளைகிறது. கொத்தமல்லி இலையில் மெக்னீசியம், வைட்டமின் பி மற்றும் ஃபோலிக் ஆசிட் உள்ளிட்டவை நிரம்பியுள்ளது. உடல் எடையை குறைக்கும் விஷயத்தில் அற்புதமான மாற்றங்களை தரக் கூடியது.
ரோஸ்மேரி : நிறைவான ஆண்டி ஆக்ஸிடண்ட் சத்துக்கள் நிறைந்த இந்த இலையானது நம் செல்களை மீள் உருவாக்கம் செய்ய பயன்படுகிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், மெடபாலிக் நிலையை மேம்படுத்தவும் உதவிகிறது. சிறிய பானைகளில் மண் நிரப்பி, அதில் இந்த விதைகளை தூவி வைப்பதன் மூலமாக ரோஸ்மேரி செடிகளை வளர்த்து விட முடியும். உடல் எடையை குறைக்க இதை பயன்படுத்தி கொள்ளலாம்.