இன்றைய மோசமான வாழ்வியல் சூழலில் நமது உடல் நலமானது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது நாம் எடுத்து கொள்ளும் ஆரோக்கியமற்ற உணவுகள் தான். இதற்கு அடுத்தாக நமது அன்றாட செயல்பாடுகளை சொல்லலாம். தினமும் ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது, மோசமான உணவு பழக்கம், உடற்பயிற்சி இன்மை போன்றவற்றால் தான் பெரிய பாதிப்புகள் உடலுக்கு ஏற்படுகிறது. இதை சரி செய்வதற்கு பலர் தேர்ந்தெடுக்கும் வழி தான் நடைப்பயிற்சி. ஆனால், பலருக்கும் இதை எப்படி சரியாக பின்பற்றுவது என்பது பற்றியும், இதனால் எந்த மாதிரியான விளைவுகள் உடலுக்கு ஏற்படும் என்பது பற்றியும் இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
நடைப்பயிற்சி : ஒரு நாளைக்கு எவ்வளவு ஸ்டெப்ஸ் நடக்கிறோம் என்பது குறித்து ஆரம்ப காலத்தில் யோசிக்க வேண்டும். பொதுவாக நடைப்பயிற்சியின் தொடக்க காலத்தில் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பது தான் மிகவும் முக்கியம். அதே போன்று நடைப்பயிற்சியின் போது எவ்வளவு வேகமாக நடக்கிறோம், நடக்கும் முறை ஆகியவை மிகவும் முக்கியம்.
ஸ்டெப்ஸ் மற்றும் வேகம் : வேகமான நடைப்பயிற்சி உடல் எடையை குறைக்க உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. வயதானவர்களுக்கு வேகமான நடைபயிற்சி நல்லது என்றாலும், அதை படிப்படியாக அதிகரிக்கலாம். அதிக ஒருவேளை உங்களுக்கு வேகமாக நடப்பதில் சிக்கல் இருந்தால், மெதுவாக நடக்க முயற்சி செய்யுங்கள்.நீங்கள் எவ்வளவு ஸ்டெப்ஸ் நடந்தீர்கள் என்பதுடன், நீங்கள் நடந்ததற்கான நேரத்தின் கால அளவைக் குறித்து கொள்ளுங்கள். இந்த வேகமான நடைபயிற்சியானது அடிவயிற்றின் ஆழமான கொழுப்புகளை குறைக்க உதவுகிறது என்று பல வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
நடக்கும் முறை : எடை குறைப்பை மனதில் வைத்துக்கொண்டு நிதானமாக நடக்காதீர்கள். நேரான தோரணையுடன் நடக்க செய்யுங்கள். இப்படி செய்வதால் முழு உடல் தசைகளும் நீட்டப்பட்டு, தீவிரமான செயல்பாட்டிற்கு உதவும். இதற்கு உங்கள் கைகளைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் முன்னோக்கிச் செல்ல வேகத்தையும் பயன்படுத்துங்கள். நீங்கள் நடக்கும்போது உள் உடல் உறுப்புகளை தீவிர பயிற்சிக்கு உட்படுத்துங்கள்.
நேரம் : நடைப்பயிற்சியில் போது சிறு சிறு இடைவேளை எடுத்து கொண்டு நடந்தால் அதில் அதிக பயன்கள் இருக்காது. ஓய்வு நேர நடைப்பயிற்சியானது எடையைக் குறைப்பதில் முற்றிலும் பங்களிக்காது. நடைப்பயிற்சியின் பலனைப் பெற, ஒருவர் குறைந்தது 20-30 நிமிடங்களாவது தொடர்ந்து நடக்க வேண்டும். பவர் வாக் என்று பிரபலமாக இதை அழைக்கின்றனர். இத்தகைய நடைப்பயிற்சியானது ஒரு மணி நேரத்திற்கு 4 முதல் 5 மைல்கள் நடக்கும்போது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 550 கலோரிகளை எரிப்பதாகக் கூறப்படுகிறது.
நடைப்பயிற்சி காலம் : காலை நேரங்களில் தீவிரமான உடல் பயிற்சிகளை மேற்கொள்வது எப்போதும் உங்களுக்கு சிறந்த பலனை தரும். அமைதி சூழல் மற்றும் நல்ல தரமான காற்று அதிகாலை நேரத்தில் தான் கிடைக்கும். எனவே இந்த நேரம் உடற்பயிற்சி செய்தால் இது அதிக பலன்களை தருவதாக கூறப்படுகிறது. மேலும், காலை நேரத்தில் தங்களுக்கு போதுமான நேரத்தைப் பெறுகிறார்கள். மற்ற நேரங்களில் பெரும்பாலும் வீட்டு மற்றும் அலுவலக வேலைகளில் மும்முரமாக இருப்பார்கள்.