பெண்ணுறுப்பு என்பது ஒரு பெண்ணின் வாழ்நாளில் நிறையவே கடந்து வருகிறது. பருவமடைதல், மாதவிடாய் மற்றும் பிரசவம் போன்ற பல மாற்றங்களை கடந்து வரும்போது, அந்த மைல்கற்களுக்கு இடையில் பெரிய மாற்றங்களும் நிகழ்கின்றன. ஒரு நபரின் ஹார்மோன் அளவு வயதுக்கு ஏற்ப மாறும்போது வல்வா, பிறப்புறுப்பின் ஒரு பகுதியும் மாறுபடுகிறது. பொதுவான ஒரு வாக்கியத்தை மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள். ஒரு பெண்ணின் பிறப்புறுப்பில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி சிந்திக்க ஒரு வழி உண்டு அது, கண்ணாடியில் அப்பெண் முகத்தைப் பார்த்து அதில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி சிந்திக்க வேண்டுமாம். பருவமடையும் போது ஒரு பெண்ணின் பிறப்புறுப்பு வயதிற்கேற்ப எவ்வாறு மாறும் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.
ஒரு பெண் பருவமடையும் போது, அவரது பெண்ணுறுப்பும் முதிர்ச்சியடையத் தொடங்கிவிடுகிறது. இளம்பெண்கள் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி, பருவமடைதல் 8 முதல் 13 வயதுக்குள் நிகழ்கிறது. பருவமடைதல் நிகழும்போது, ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பதால் பெண்ணுறுப்பும் முதிர்ச்சியடையத் தொடங்குகிறது. அப்போதுதான் முதல் மாதவிடாய் ஏற்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள். ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்ததன் விளைவாக, பெண்கள் தங்கள் பிறப்புறுப்பில் பாலியல் உணர்வுகளை உணருவார்கள். இது இயற்கையாகவே நிகழும் ஒன்றுதான் என்கின்றனர் மருத்துவர்கள். பருவமடையும் போது அண்டவிடுப்பும் ஏற்படத் தொடங்குகிறது. அண்டவிடுப்பு என்பது மாதவிடாய் சுழற்சியின் ஒரு பகுதியாகும். கருப்பையில் இருந்து கருமுட்டை வெளியேறும் போது இது நிகழ்கிறது. அண்டவிடுப்பின் போது, முதிர்ச்சியடைந்த முட்டை கருப்பையில் இருந்து ஃபலோபியன் குழாய்களுக்கு நகரும். இந்த செயல்முறையின் போது பெண்ணுறுப்பில் இருந்து வெள்ளை நிறத்தில் திரவம் போன்ற ஒன்றின் வெளியேற்றம் இருக்கும்.
பெண்ணின் 20களில் என்ன மாற்றம்? ஒரு பெண் தனது பருவத்தின் 20களில், ஹார்மோன்களின் மாற்றம் காரணமாக பெண்ணுறுப்பின் தோற்றம் வெகுவாக மாறக்கூடும். 20களில் உங்கள் பிறப்புறுப்பின் புலப்படும் பகுதியில் உள்ள லேபியா (labia) அல்லது பெண்ணுறுப்பின் உள் மற்றும் வெளிப்புற உதடுகளின் அளவு மாற்றத்தை காணும். சில நேரங்களில் அதன் வண்ணம் கூட மாற்றம் காணும். இந்த நேரத்தில், உங்கள் பெண்ணுறுப்பில் வளரும் முடியும் கடினத் தன்மையுடன் தடிமனாக இருக்கலாம். ஒரு பெண், தனது 20 வயதில் பிறப்புக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தத் தொடங்கினால், அவள் தேர்வு செய்யும் கருத்தடை முறையைப் பொறுத்து பெண்ணுறுப்பில் மாற்றங்கள் ஏற்படலாம்.
பெண்ணின் 30களில் என்ன மாற்றம்? 30 வயதிற்குள் நுழையும்போது, ஒரு பெண்ணின் பிறப்புறுப்பு அதன் இயற்கையான தசை வலுவை இழக்கும். இன்று பல பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் காலத்தை தள்ளிப்போடுகின்றனர். அதோடு, அவர்களின் 30 அல்லது 35 வயதுகளில் கூட குழந்தைகள் பெற நினைக்கின்றனர். ஆனால், அந்த காலகட்டத்தில் பெண்ணின் பெல்விக் ஃப்லோர் தசைகள் (pelvic floor muscles) பலவீனமடைகின்றன. இதனால், அந்த வயதில் பல பெண்களுக்கு குழந்தை பெறுவதில் பெரும் சிக்கல் நேருகிறது. பெல்விக் ஃப்லோர் தசைகள் மிகவும் பலவீனமாகிவிட்டால், சிறுநீர்ப்பை, கருப்பை அல்லது மலக்குடலில் பிரச்சனை ஏற்படும் அபாயல் அதிகரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், எளிய பயிற்சிகள் மூலம் பெண்ணுறுப்பை வலுவாக வைத்திருக்கலாம் மற்றும் இதுபோன்ற இந்த நிலைமைகளையும் தடுக்கலாம்.
பெண்ணின் 40களில் என்ன மாற்றம்? 40 வயதிற்குள் நுழையும்போது, உங்கள் பெண்ணுறுப்பில் பி.ஹெச் அளவு அதிகரிக்கும் மற்றும் பெண்ணுறுப்பில் வளரும் முடியின் நிறமும் அடர்த்தியும் மெல்லியதாக மாறலாம். உங்கள் 40களில், ஈஸ்ட்ரோஜன் அளவானது மெதுவாக குறையத் தொடங்குகிறது. இதனால் கொலாஜன் குறைந்து, வல்வாவுக்கு செல்லும் இரத்த ஓட்டமும் குறையும். இதன் விளைவாக லேபியா தளர்வாக தோன்றும். பெண்ணுறுப்பில் வளர்ந்திருக்கும் முடியும் மெல்லியதாகி சாம்பல் நிறமாக மாறலாம்.
பெண்ணின் 50களில் என்ன மாற்றம்? ஒரு பெண், தனது 50 வயதை எட்டும்போது, அந்த வயதின் முற்பகுதியில் உங்களுக்கு மாதவிடாய் நின்றிருக்கலாம். மேலும் பெண்ணுறுப்பில் வறட்சி மற்றும் வல்வாவில் சுருக்கங்கள் ஏற்படலாம். இந்த பருவம் மெனோபாஸ் எனும் மாதவிடாய் சுழற்சியின் முடிவைக் குறிக்கும். ஒழுங்கற்ற மாதவிடாய், குளிர், வெப்ப காலநிலை, மனநிலை மாற்றங்கள் மற்றும் பெண்ணுறுப்பின் வறட்சி ஆகியவை வரவிருக்கும் மாதங்கள் அல்லது ஆண்டுகளில் நீங்கள் மாதவிடாய் நிறுத்தத்திற்குள் நுழையும் அறிகுறிகளாகும். பெண்களின் வயதிற்கேற்ப பெண்ணுருப்பில் ஏற்படும் மாற்றங்கள் இயல்பானவையே. ஆனால், பெண்ணுறுப்பில் அடிக்கடி வலி ஏற்படும் பட்சத்தில் மகப்பேறு மருத்துவரை அணுகுவது சிறந்தது.