கொசு கடியால் பலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் ஒரு சிலர் மட்டும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களை சுற்றி பலர் இருந்தாலும் இவர்கள் மட்டும்தான் கொசு கடி தாங்க முடியவில்லை என புலம்பிக் கொண்டிருப்பார்கள். அதற்கு அவர்களின் இரத்தம்தான் காரணம் என்கிறது ஆய்வு. என்னது கொசு கூட தேடி தேடி ஒருவரை கடிக்குமா என்றால் ஆம் என்கிறது அந்த ஆய்வு. அப்படி ஒருவரை மட்டும் கொசு கடிக்க என்ன காரணம்..?