முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » நேற்று சாப்பிட்ட உணவால் வயிறு என்னமோ பண்ணுதா..? ஒருவேளை ஃபுட்பாய்சன் ஆயிடுச்சா..? தெரிந்துகொள்ள கிளிக் பண்ணுங்க..!

நேற்று சாப்பிட்ட உணவால் வயிறு என்னமோ பண்ணுதா..? ஒருவேளை ஃபுட்பாய்சன் ஆயிடுச்சா..? தெரிந்துகொள்ள கிளிக் பண்ணுங்க..!

பொதுவாக உணவை நஞ்சாக்கும் பாக்டீரியாக்களில் கேம்பிலோபாக்டர் பாக்டீரியா, சால்மோனெல்லா பாக்டீரியா, ஈ கோலி பாக்டீரியா மற்றும் நோரோவைரஸ் ஆகியவைதான் முக்கிய பங்கு வகிக்கின்றன.

  • 16

    நேற்று சாப்பிட்ட உணவால் வயிறு என்னமோ பண்ணுதா..? ஒருவேளை ஃபுட்பாய்சன் ஆயிடுச்சா..? தெரிந்துகொள்ள கிளிக் பண்ணுங்க..!

    உணவு கூட சில சமயங்களில் நஞ்சாகலாம். எப்போதெனில் அது ஆரோக்கியமற்றதாக மாறும்போது... அப்படி நீங்கள் சாப்பிட்ட உணவு ஆரோக்கியமற்றதாக இருந்தால் ஃபுட் பாய்சன் ஏற்பட வாய்ப்புள்ளது.. ஆனால் அது ஃபுட் பாய்சன்தான் என்பதை எவ்வாறு கண்டறிவது..? சாப்பிடும் உணவு ஆரோக்கியமற்றது என்பதௌ எப்படி கண்டறிவது..? உங்களுக்கான விடை இதோ...

    MORE
    GALLERIES

  • 26

    நேற்று சாப்பிட்ட உணவால் வயிறு என்னமோ பண்ணுதா..? ஒருவேளை ஃபுட்பாய்சன் ஆயிடுச்சா..? தெரிந்துகொள்ள கிளிக் பண்ணுங்க..!

    நீங்கள் சாப்பிடும் உணவை பாய்சனாக மாற்றுவது பாத்தோஜென் ( pathogens ) என்னும் ஒரு வேதிப்பொருள்தான். அது நாம் சமைக்கும்போது அதிகபட்சமாக இறந்துவிடும். அதேசமயம் சரியாக சூடு செய்து சமைக்கவில்லை, முறையாக சுத்தம் செய்து சமைக்கவில்லை எனில் உடல் உபாதைகளை உண்டாக்கும். இந்த பாத்தோஜென்கள் நஞ்சாக உடலில் கலந்துவிடும். எனவேதான் உணவை சரியான முறையில் பத்திரப்படுத்தி நன்கு சூடு படுத்தி சாப்பிட வேண்டும். மீந்த உணவுகளை சாப்பிடும்போதும் நன்கு சூடுபடுத்திவிட்டுத்தான் சாப்பிட வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 36

    நேற்று சாப்பிட்ட உணவால் வயிறு என்னமோ பண்ணுதா..? ஒருவேளை ஃபுட்பாய்சன் ஆயிடுச்சா..? தெரிந்துகொள்ள கிளிக் பண்ணுங்க..!

    அதேபோல் கைகளை நன்கு கழுவிவிட்டு சாப்பிடவில்லை என்றாலும் கைகள் மூலமாகவும் தொற்று உண்டாகலாம். ஏனெனில் ஃபுட் பாய்சன் என்பது நஞ்சு, பாக்டீரியா, வைரஸ் என பல வகைகளிலிருந்து உருவாகிறது. பொதுவாக உணவை நஞ்சாக்கும் பாக்டீரியாக்களில் கேம்பிலோபாக்டர் பாக்டீரியா, சால்மோனெல்லா பாக்டீரியா, ஈ கோலி பாக்டீரியா மற்றும் நோரோவைரஸ் ஆகியவைதான் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 46

    நேற்று சாப்பிட்ட உணவால் வயிறு என்னமோ பண்ணுதா..? ஒருவேளை ஃபுட்பாய்சன் ஆயிடுச்சா..? தெரிந்துகொள்ள கிளிக் பண்ணுங்க..!

    நீங்கள் சாப்பிட்ட உணவு ஃபுட் பாய்சனாக மாறிவிட்டது எனில் வாந்தி, வயிற்றுப்போக்கு, அடி வயிறு இறுக்கிப்பிடித்தல், குமட்டல், ஆற்றல் இழப்பு, சோர்வு ,சில சமயங்களில் லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உண்டாகும்.

    MORE
    GALLERIES

  • 56

    நேற்று சாப்பிட்ட உணவால் வயிறு என்னமோ பண்ணுதா..? ஒருவேளை ஃபுட்பாய்சன் ஆயிடுச்சா..? தெரிந்துகொள்ள கிளிக் பண்ணுங்க..!

    இந்த அறிகுறிகள் இருப்பின் உடனே மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஃபுட் பாய்சன் வந்துவிட்டதெனில் அது சால்மோனெல்லா பாக்டீரியாவாக இருந்தால் குணமாக 12 முதல் 36 மணி நேரம் ஆகும். கேம்பிலோபாக்டர் பாக்டீரியா 2 முதல் 7 நாட்கள் ஆகும். ஈ கோலி பாக்டீரியா எனில் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை ஆகும்.

    MORE
    GALLERIES

  • 66

    நேற்று சாப்பிட்ட உணவால் வயிறு என்னமோ பண்ணுதா..? ஒருவேளை ஃபுட்பாய்சன் ஆயிடுச்சா..? தெரிந்துகொள்ள கிளிக் பண்ணுங்க..!

    இந்த சமயங்களில் காரசாரமாக அல்லாமல் எளிதில் செரிமானிக்கக் கூடிய காரமற்ற உணவுகளாக சாப்பிடுகள். எண்ணெய் , மாவுப்பொருள், பதப்படுத்தப்பட்ட உணவு போன்றவற்றை தவிருங்கள். வீட்டிலேயே கஞ்சி காய்ச்சி குடித்தால் விரைவில் குணமாகலாம்.

    MORE
    GALLERIES