மக்கள் குளிக்கும்போது உடலை ஸ்க்ரப்பிங் செய்ய நார் பயன்படுத்துகிறார்கள். இது இயற்கையாகவே இறந்த சருமத்தை வெளியேற்றி உடலை சிறந்த முறையில் சுத்தப்படுத்துகிறது. உடல் ஸ்க்ரப்பிங்கிற்கு நார் பயன்படுத்தினால், அது உடலை மெருகூட்டுகிறது மற்றும் சருமத்தை பளபளக்க செய்கிறது. அதோடு இதைப் பயன்படுத்துவதால், சருமம் வறண்டு போகாது, சொறி போன்றவை இருக்காது.
குறிப்பாக இதன் பயன்பாடு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இப்படி பல அம்சங்கள் கொண்ட நார் பயன்படுத்துவது சில பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது. எனவே, அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு சில முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொள்வது அவசியம். அதோடு அதை எப்படி முறையாக பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெரிந்துகொண்டால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
நார் பயன்படுத்துவதற்கு முன்பு, அது ஈரமாக இருக்க வேண்டும். உலர்ந்த நாரை தோலில் தேய்க்கக்கூடாது. இவ்வாறு செய்வதால் தோலில் தடிப்புகள் ஏற்படும். எனவே அதை பயன்படுத்தும் முன் முதலில் ஈரமாக்கி அதன் மீது சில துளிகள் திரவ சோப்பைப் போடவும். இப்போது இரண்டு கைகளாலும் தேய்த்து நுரையை உருவாக்கவும். பிறகு, உடலில் வட்ட இயக்கத்தில் தேய்க்கத் தொடங்குங்கள். பின்னர் நீரில் உடலைக் கழுவவும்.
பகிர்ந்து கொள்ள வேண்டாம் : பல வீடுகளில், ஒரே நாரை அனைத்து குடும்ப உறுப்பினர்களும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவ்வாறு செய்வது தோல் நோய்க்கு வழிவகுக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். எனவே நீங்கள் பயன்படுத்தும் நாரை நீங்கள் மட்டுமே பயன்படுத்துங்கள். இல்லையெனில் உங்களுக்கு ஏதேனும் சரும பாதிப்புகள் இருந்தாலும் அது குடும்ப உறுப்பினர்களையும் பாதிக்கும். சில சமயம் உடலில் முகப்பரு, பரு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும்.