சிம்பு உடல் எடையைக் குறைக்க இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? 101 கிலோ லிருந்து 70 கிலோவுக்கு வந்த ஃபிட்னஸ் ரகசியம் இதுதானா..?
Web Desk | December 21, 2020, 2:02 PM IST
1/ 12
ஈஸ்வரன் படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியிட்ட நாள் முதல் இன்று அவருடைய நீல நிற குர்த்தா அணிந்த புகைப்படங்கள் வரை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவது... எப்படி இப்படி உடல் எடையைக் குறைத்தார் என்பதுதான்.. அவர் உடல் எடையைக் குறைத்தது அனைவருக்கும் ஷாக் என்பதை விட சிம்பு மீண்டும் களத்தில் இறங்கிவிட்டார் என்பதுதான் பலருடைய மகிழ்ச்சி , எதிர்பார்ப்பாக இருக்கிறது.
2/ 12
ஒரு பக்கம் அவருடைய இந்த திடீர் மாற்றம் பல இளைஞர்களுக்கு ஊக்குவிப்பாகவும் இருக்கிறது. குறிப்பாக உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு மிகப்பெரிய உந்துதலாக இருக்கிறார்.. இவை எல்லாவற்றையும் விட எப்படி இப்படி உடல் எடையைக் குறைத்தார் என்பதுதான் பலருடைய ஆச்சரியம்... அதற்கான பதில் இதோ....
3/ 12
சிம்பு உடல் எடையைக் குறைப்பதற்கு முன் 101 கிலோ இருந்திருக்கிறார். அதிலிருந்து 30 கிலோ எடையைக் குறைத்து 71 கிலோ வந்திருக்கிறார். இதை சொல்வதற்கு எளிமையாக இருக்கலாம். ஆனால் அதன் பின்னால் இருக்கும் அவருடைய கடின உழைப்பு அளவிட முடியாதது.
4/ 12
அவருடைய இந்த ஃபிட்னஸ் பயணம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை சிம்புவின் நெருங்கிய நண்பர் மஹத் ராகவேந்திராவிடமும் ஃபிட்னஸ் ட்ரெய்னர் சந்தீப் ராஜுடனும் பேசியுள்ளனர்.
5/ 12
அதில் ட்ரெய்னர் சந்தீப் மஹத்திற்கு உடற்பயிற்சிகள் அளித்து அவருக்கு 6 பேக் வர வைத்திருக்கிறார். இந்த மாற்றத்தைப் பார்த்ததும்தான் சிம்பு சந்தீப்பிடம் ட்ரெய்னிங் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். இது குறித்து ட்ரெய்னர் சந்தீப் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் “ நான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் சிம்புவை சந்தித்தேன். அப்போது அவர் 101 கிலோ இருந்தார். அவர் படத்திற்காக உடல் எடை குறைக்க நினைக்கவில்லை..என் ரசிகர்களுக்காகவும், என்னை நேசிக்கும் மக்கள் மற்றும் நெருக்கடி காலத்தில் என்னுடன் துணை நின்றவர்களின் விருப்பத்திற்காகவும்தான் எடையை குறைக்க நினைக்கிறேன் என்று கூறினார்” என சந்தீப் கூறியுள்ளார்.
6/ 12
அதேபோல் அவர் தன்னுடைய வாழ்க்கை முறையையே முற்றிலும் மாற்ற நினைத்ததாகவும், அதற்காக நான் உதவினேன் என்றும் கூறியுள்ளார். ”சிம்புவுக்கு தொப்பையைக் குறைக்க வேண்டும் என்பதே முதல் விருப்பமாக இருந்தது. அதேசமயம் அவர் ஒரே உடற்பயிற்சியை தொடர்ந்து செய்யாமல் தினமும் புதிது புதிதாக ஆக்டிவிட்டீஸ் செய்ய நினைப்பவர்.
7/ 12
எனவே அவருக்கு ஏற்றார்போல் புதுபுது பயிற்சிகளுடன் களத்தில் இறங்கினோம். கடந்த 2 மாதங்காகத்தான் பயிற்சியை தீவிரமாக மேற்கொண்டோம். தினமும் அவர் காலை 4.30 மணிக்கு தன் பயிற்சியை ஆரம்பிப்பார். வேக வேகமாக நடை பயிற்சி மேற்கொண்டார். ஆரம்பத்தில் வாரத்தில் நான்கு நாட்களும்..தற்போது 5 நாட்கள் என பயிற்சி அளித்து வருகிறேன் எனக் கூறியுள்ளார். ( image source : times of india )
8/ 12
பிப்ரவரி மாதம் வரை 87 கிலோ இருந்த சிம்பு லாக்டவுனில் மீண்டும் எடை கூடியதாகக் கூறுகிறார். பின் ஜூன் மாதத்திலிருந்து தினசரி உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். தற்போது அவர் 71 கிலோ இருக்கிறார்.அவரைச் சுற்றி நிறைய வதந்திகள் பேசப்படுகிறது. ஆனால் அவருடன் பயணத்ததிலிருந்து கூறுகிறேன். சிறந்த மனிதர். கடுமையான உழைப்பாளி. அர்பணிப்பு கொண்டவர். தற்போது அவர் பலருக்கும் உதாரணமாகியிருக்கிறார் என சந்தீப் கூறியுள்ளார். ( image source : times of india )
9/ 12
சிம்பு உணவு விஷயத்திலும் மிகவும் கட்டுப்பாடோடு இருந்ததாகக் கூறியுள்ளார். சிம்பு ஜங்க் ஃபுட், அசைவ உணவுகளை முற்றிலுமாக தவிர்த்துவிட்டார். அல்கலைன் மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளுக்கு மாறினார். கலோரி குறைவான உணவுகளைதான் தேர்வு செய்து சாப்பிட்டார். குறிப்பாக திரவ வகை உணவுகளைதான் அதிகமாக சாப்பிட்டார். பழ வகைகளில் கூட சாலட் சாப்பிடாமல் ஜூஸாக சர்க்கரை இல்லாமல் குடித்தார்.
10/ 12
அதிக புரோட்டீன் நிறைந்த மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவு என முற்றிலும் தன் உணவுப் பழக்கத்தையே மாற்றிக்கொண்டார். அதனால்தான் குறுகிய நாட்களில் அவருடைய உடல் எடையில் இத்தனை பெரும் மாற்றத்தைக் காண முடிந்தது. இதில் சிறந்த விஷயம் என்னவெனில் அவருடைய உணவுகளை அவரே சமைத்து சாப்பிட்டதுதான் என கூறுகிறார் சந்தீப்.
11/ 12
அதைத்தொடர்ந்து சிம்புவின் நெருங்கிய நண்பர், பிக்பாஸ் புகழ் மஹத் ராகவேந்திராவிடம் டைம்ஸ் பத்திரிக்கை பேசியதில் “ சிம்பு நிறைய விளையாட்டு ரீதியான பயிற்ச்சிகளைத்தான் அதிகம் விரும்புவார். அப்படி அவர் டென்னிஸ், பாக்ஸிங், ரோவிங், ஸ்விம்மிங் , பேஸ்கெட் பால் என இந்த விளையாட்டுகளை அதிகமாக விளையாடுவார். ( image source : times of india )
12/ 12
சென்னையில் சிறந்த குத்துச்சண்டை வீரரான சுதர்ஷன் அண்ணாதுரைதான் சிம்புவுக்கு பாக்ஸிங் பயிற்சி அளித்தார். சரவணன் என்பவர் டென்னிஸ் பயிற்சி அளித்தார் . இறுதியாக மஹத் “ அவரின் நெருக்கடி காலகட்டத்தில் பலரும் அவரைப் பற்றி தவறான கருத்துக்களைத்தான் எழுதினார்கள். ஆனால் இன்று அவை எல்லாவற்றையும் தவிடுபொடி ஆக்கிவிட்டார் சிம்பு. உறுதியான திருப்புமுணையை அளித்திருக்கிறார் “ என்று கூறியுள்ளார். ( source : times of india )