நம்முடைய சிறுநீர் பையானது 1.5 முதல் 2 கப் தண்ணீரை தேக்கி வைக்கும். அதில் அதிகபட்ச அளவான 2 கப்பை தேக்கி வைக்கும்போதுதான் அவசர அவசரமாக வரும் சிறுநீராகும். இப்படி அடிக்கடி சிறுநீர் வர சில காரணங்கள் உள்ளன. அதில் ஆரோக்கியமான காரணம் நீங்கள் அடிக்கடி தண்ணீர் குடிப்பதாலும், காஃபி குடிப்பதாலும் நிகழலாம். இப்படி 3 அல்லது 4 மணி நேரத்திற்கு சிறுநீர் வருவது இயல்புதான். அதுவும் நீங்கள் தண்ணீர் அருந்தும் அளவைப் பொருத்தது.
இவ்வாறு செய்வதால் சிறுநீர் நீண்ட நேரம் சிறுநீர் பையில் தேங்கியிருந்தால் அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் வளர்ந்து சிறுநீர் தொற்றை உண்டாக்கும். அதிகபட்சமாக 15 நிமிடங்கள் தேக்கி வைப்பதே போதுமானது. அதற்கும் மேல் தேக்கி வைத்தால் ஆபத்து. சிறுநீர் பையில் தொற்று உண்டானால் சிறுநீர் பாதையிலும் தொற்று ஏற்படும்.