ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » சிறுநீர் அதிக துர்நாற்றத்தை உண்டாக்குகிறதா..? இந்த பிரச்சனை காரணமாக இருக்கலாம்..!

சிறுநீர் அதிக துர்நாற்றத்தை உண்டாக்குகிறதா..? இந்த பிரச்சனை காரணமாக இருக்கலாம்..!

சில நேரங்களில் அது உங்களின் உடல் நலப் பிரச்சனைகளை உணர்த்தும் அறிகுறியாகவும் இருக்கலாம். அப்படி உங்கள் சிறுநீர் தாங்க முடியாத துர்நாற்றத்தை வீசுகிறது எனில் இந்த விஷயங்கள் காரணமாக இருக்கலாம்.

 • 110

  சிறுநீர் அதிக துர்நாற்றத்தை உண்டாக்குகிறதா..? இந்த பிரச்சனை காரணமாக இருக்கலாம்..!

  சிலர் கழிவறை சென்று வந்த பின் அடுத்தவர் பயன்படுத்த முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசும். அதை அவரே கூட சில நேரங்களில் உணரக்கூடும். ஆனால் இதை சாதாரண விஷயமாக கடந்துவிடக்கூடாது. சில நேரங்களில் அது உங்களின் உடல் நலப் பிரச்சனைகளை உணர்த்தும் அறிகுறியாகவும் இருக்கலாம். அப்படி உங்கள் சிறுநீர் தாங்க முடியாத துர்நாற்றத்தை வீசுகிறது எனில் இந்த விஷயங்கள் காரணமாக இருக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 210

  சிறுநீர் அதிக துர்நாற்றத்தை உண்டாக்குகிறதா..? இந்த பிரச்சனை காரணமாக இருக்கலாம்..!

  சிறுநீரகப் பாதையில் தொற்று : Urinary Tract Infections என்று சொல்லக் கூடிய சிறுநீரகப் பாதை தொற்று பிரச்சனை இருந்தாலும் சிறுநீர் துர்நாற்றம் வீசலாம். அதாவது தொற்று பாக்டீரியாக்களின் கலப்படமே இந்த துர்நாற்றத்திற்குக் காரணம். இதில் உங்களுக்கு சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சனைகளையும் அனுபவிக்கக் கூடும்.

  MORE
  GALLERIES

 • 310

  சிறுநீர் அதிக துர்நாற்றத்தை உண்டாக்குகிறதா..? இந்த பிரச்சனை காரணமாக இருக்கலாம்..!

  போதுமான நீர் அருந்தாமை : நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றாலும் உங்கள் சிறுநீர் துர்நாற்றம் வீசும். கெட்ட நீரும் அருந்தும் தண்ணீரும் கலந்து வருவதுதான் சிறுநீர். நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை எனில் கெட்ட நீரின் அளவு அதிகமாக இருக்கும். இதனால் உங்கள் சிறுநீர் துர்நாற்றம் வீசும்.

  MORE
  GALLERIES

 • 410

  சிறுநீர் அதிக துர்நாற்றத்தை உண்டாக்குகிறதா..? இந்த பிரச்சனை காரணமாக இருக்கலாம்..!

  காஃபி அதிகமாக அருந்துதல் : ஆம்.. நீங்கள் அதிகமாக காஃபி அருந்தும் நபர் எனில் உங்கள் சிறுநீர் துர்நாற்றம் வீசலாம். ஏனெனில் காஃபியின் கலவையானது வளர்சிதை மாற்றமடையும் போது, அதன் துணை பொருட்கள் சிறுநீரில் துர்நாற்றத்தை உண்டாக்கும். அதோடு காஃபி உடலில் நீரிழப்பை உண்டாக்கக் கூடும் என்பதாலும் சிறுநீரில் துர்நாற்றம் வீசும்.

  MORE
  GALLERIES

 • 510

  சிறுநீர் அதிக துர்நாற்றத்தை உண்டாக்குகிறதா..? இந்த பிரச்சனை காரணமாக இருக்கலாம்..!

  நீரிழிவு நோய் : நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறுநீர் துர்நாற்றம் வீசும். அதாவது நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை சமன் செய்ய முடியாத காரணத்தால் அது சிறுநீர் வழியாக கலந்து வரும்போது துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

  MORE
  GALLERIES

 • 610

  சிறுநீர் அதிக துர்நாற்றத்தை உண்டாக்குகிறதா..? இந்த பிரச்சனை காரணமாக இருக்கலாம்..!

  பாலியல் தொற்று : Sexually Transmitted Infections எனப்படும் பாலியல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சிறுநீர் துர்நாற்றம் வீசும். சில சமயங்களில் இந்த நோய்த்தொற்றுகள் சிறுநீரின் வாசனையை மாற்றக்கூடிய சிறுநீர்க்குழாய் அழற்சியை ஏற்படுத்தும். STI தவிர, யோனியில் எரிச்சல் இருந்தாலும் சிறுநீர் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும்.

  MORE
  GALLERIES

 • 710

  சிறுநீர் அதிக துர்நாற்றத்தை உண்டாக்குகிறதா..? இந்த பிரச்சனை காரணமாக இருக்கலாம்..!

  குறிப்பிட்ட உணவு வகைகள் : அனைத்து உடல்களும் வேறுபட்டவை மற்றும் அவற்றின் வெவ்வேறு இயக்க வழிமுறைகள் காரணமாக, அவை வெவ்வேறு உணவுகளை வித்தியாசமாக ஜீரணிக்கின்றன. அஸ்பாரகஸ், பிரஸ்ஸல்ஸ் முளைகள், வெங்காயம், பூண்டு, சால்மன், ஆல்கஹால் மற்றும் கறி ஆகியவை சில உணவுகளை சிலரின் உடலால் முழுமையாக ஜீரணிக்க கடினமாக இருக்கும். இதனால் நாற்றங்களுடன் கூடிய வளர்சிதை மாற்றங்களை விட்டு வெளியேறுகின்றன.

  MORE
  GALLERIES

 • 810

  சிறுநீர் அதிக துர்நாற்றத்தை உண்டாக்குகிறதா..? இந்த பிரச்சனை காரணமாக இருக்கலாம்..!

  ஈஸ்ட் தொற்று : வெஜினா உட்பட உடலின் பல பாகங்களில் ஈஸ்ட்கள் இயற்கையாகவே உள்ளன. அவை அதிகமாகப் பெருகும் போது, அது உடலில் சிக்கல்களுக்கு வழிவகுக்கும், மேலும் வெஜினாவில் ஈஸ்ட்கள் வளரும். , சிறுநீர்க்குழாய்க்கும் வெஜினாவுக்கும் இடையே இருப்பதால், சிறுநீர் துர்நாற்றம் வீசும். சிறுநீர் பாதையில் எரிச்சல், சிவத்தல், வீக்கம் மற்றும் அடர்த்தியான வெள்ளை வெளியேற்றம் உள்ளிட்ட பிற அறிகுறிகளும் இதில் தென்படும்.

  MORE
  GALLERIES

 • 910

  சிறுநீர் அதிக துர்நாற்றத்தை உண்டாக்குகிறதா..? இந்த பிரச்சனை காரணமாக இருக்கலாம்..!

  மருந்து மாத்திரைகள் : ஏதேனும் உடல் நல பாதிப்புக்காக சிகிச்சை , மருந்து , மாத்திரைகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்கிறீர்கள் என்றாலும் உங்கள் சிறுநீர் துர்நாற்றம் வீசக்கூடும். இதுகுறித்து மருத்துவரிடம் பேசுவதும் நல்லது.

  MORE
  GALLERIES

 • 1010

  சிறுநீர் அதிக துர்நாற்றத்தை உண்டாக்குகிறதா..? இந்த பிரச்சனை காரணமாக இருக்கலாம்..!

  கல்லீரல் பிரச்சனை : கல்லீரல் பாதிப்பு இருந்தாலும் உங்கள் சிறுநீர் துர்நாற்றம் வீசக்கூடும் என்கிறது சில ஆய்வுகள். அதாவது Foetor hepaticus என்ற தீவிரமான கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவ்வாறு துர்நாற்றம் வீசலாம். இந்த சமயத்தில் சிறுநீரின் நிறம் ஆரஞ்சு, அடர் சிவப்பு, பிரவுன் போன்ற நிறங்களில் இருக்கும்.

  MORE
  GALLERIES