முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » உங்கள் காலையை நட்ஸ், பாதாமுடன் ஆரம்பித்தால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா..?

உங்கள் காலையை நட்ஸ், பாதாமுடன் ஆரம்பித்தால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா..?

காலையில் பாதாம் சாப்பிடுவது உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கும். செரிமானத்தை தூண்டும். கொழுப்பை குறைக்கும். அதோடு வலுவான புரோட்டீன் ஆதாரமும் பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கிறது.

 • 15

  உங்கள் காலையை நட்ஸ், பாதாமுடன் ஆரம்பித்தால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா..?

  அனைவரும் அவர்களுடைய காலைப்பொழுதை ஆரோக்கியமான முறையில், பாசிடிவ் வைபுடன் தொடங்கவே விரும்புவார்கள். அவ்வாறான ஆரோக்கியமான காலை பொழுதுக்கு நார்ச்சத்து மற்றும், நோய் எதிர்ப்பு சக்திதான் சிறந்த வழி என வல்லுநர்கள் கூறுகின்றனர். அதையே ஊட்டச்சத்து நிபுணரான லவ்னீத் பாத்ராவும் கூறுகிறார்.

  MORE
  GALLERIES

 • 25

  உங்கள் காலையை நட்ஸ், பாதாமுடன் ஆரம்பித்தால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா..?

  அதாவது இன்ஸ்டாவில் பகிர்ந்துகொண்ட அந்த வீடியோவில் அவருடைய காலைப் பொழுதை எப்போதும் நட்ஸ் மற்றும் பாதாமுடன்தான் தொடங்குவாராம். அது அவருடைய நாளை மிகவும் ஆரோக்கியமானதாகவும் மாற்றுவதாகக் கூறுகிறார். அதோடு அவ்வாறு நட்ஸ் சாப்பிடுவது நாள் முழுவதும் உங்களை சுருசுருப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. அன்றைய நாளின் ஆற்றலும், உற்சாகமும் உங்களை பாசிடிவாக மாற்றும் என்கிறார். அதோடு நட்ஸுகளை எப்படி சாப்பிட வேண்டும் என சில குறிப்புகளையும் அளித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 35

  உங்கள் காலையை நட்ஸ், பாதாமுடன் ஆரம்பித்தால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா..?

  ஊற வைத்த பாதாம் : காலையில் பாதாம் சாப்பிடுவது உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கும். செரிமானத்தை தூண்டும். கொழுப்பை குறைக்கும். அதோடு வலுவான புரோட்டீன் ஆதாரமும் பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கிறது. அதோடு விட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் உடலின் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் நிறைவு செய்கிறது. எனவே பாதாமை நேரடியாக சாப்பிடாமல் இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிடப் பரிந்துரைக்கிறார். ஏனெனில் அது உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை தடை செய்யும் என்கிறார்.

  MORE
  GALLERIES

 • 45

  உங்கள் காலையை நட்ஸ், பாதாமுடன் ஆரம்பித்தால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா..?

  ஊற வைத்த வால்நட்ஸ் : வால்நட்ஸ்தான் மற்ற அனைத்து நட்ஸ் வகைகளுக்கும் ராஜா என்று கூறுகிறார். ஏனெனில் அதில் ஆன்டிஆக்ஸிடண்ட் , புரதச்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு வகைகள் நிறைந்துள்ளன. அதோடு மூளைக்கான தீனியும் அதுதான் என்கிறார். அது மூளையில் செயல்பாடுகளை துரிதப்படுத்துகிறது. இவை மட்டுமன்றி வால்நட்ஸில் கால்சியம், பொட்டாசியம். ஐயர்ன், ஸிங்க் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. வால்நட்ஸை ஊற வைத்து சாப்பிடுவதால் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கலாம். சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். கூடுதலாக எடை இழப்பிற்கும் வால்நட்ஸ் உதவுகிறது என்று கூறியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 55

  உங்கள் காலையை நட்ஸ், பாதாமுடன் ஆரம்பித்தால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா..?

  எனவே உங்கள் காலையை ஆற்றல் மிக்கதாக மாற்ற வேண்டுமெனில் நட்ஸுகளுடன் தொடங்குங்கள் என்று கூறி நிறைவு செய்துள்ளார்.

  MORE
  GALLERIES