உங்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க நீங்கள் ஆளி விதைகள் சிறந்த மருந்து என்று கூறப்படுகிறது. ஆனால், இதை சாப்பிட்டதும் வாய்க்குள் ஒட்டும் தன்மையுடையதாக மாறிவிடும் என்பதற்காகவே பலர் அவற்றை உண்பதைத் தவிர்க்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஆளி விதைகளை வறுத்து அவற்றை உட்கொண்டால், அவை உங்களுக்கு ஏராளமான ஊட்டச்சத்தை அளிக்கும். அதுமட்டுமல்லாமல், அவற்றை மென்று எளிதில் உண்ணவும் முடியும்.
நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு டீஸ்பூன் ஆளிவிதையில் சுமார் 37 கலோரிகள் உள்ளன. மேலும், ஆளிவிதை புரதம், நார்ச்சத்து, தாமிரம் மற்றும் துத்தநாகம் ஆகியவற்றின் நல்ல ஆதாரமாகக் கருதப்படுகிறது. எனவே வறுத்த ஆளி விதைகளின் சில அற்புதமான நன்மைகள் பற்றி myhealth தளத்தில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள் உங்களுக்காக...