அத்திப்பழம் ஊட்டச்சத்துகள் : அத்திப்பழம் நார்ச்சத்தும், தாதுக்களும் நிறைந்த பழமாகும். அதில் இரும்பு, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், தாமிரம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் எல், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்களின் கலவையாக இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு அத்திப்பழம் சிறந்த மருந்தாக இருக்கும்.
மகப்பேறு : கிரேக்கர்கள் காலத்திலிருந்தே அத்திப்பழம் குழந்தைபேறுக்காக சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது கரு உருவாக உதவும் என்பது ஆய்விலும் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் கருப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் , அண்டவிடுப்பு வேலைகளை சிறபாக செய்வதற்கும் உதவுகிறது. ஆண்களுக்கு விந்தணு குறைபாடு இருந்தால் அத்திப்பழம் சாப்பிட சரியாகும். எனவே ஆண், பெண் இருவரும் பாலில் ஊற வைத்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.