பொதுவாகவே பால் இரவு நேரத்தில் குடிப்பதால் பல நன்மைகளை பெறலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் டிரிப்டோபன் (Tryptophan) எனப்படும் கலவை பாலில் நிறைந்துள்ளன. மேலும் பாலில் அமினோ அமிலமும் நிறைவாக உள்ளது. இது தூக்கத்தைத் தூண்ட உதவுகிறது. டிரிப்டோபன் நரம்புகளை தளர்த்தும் செரோடோனின் என்ற ஹார்மோனாக மாறுகிறது. தவிர, செரோடோனின் உடலில் மெலடோனின் அளவை அதிகரிக்கிறது. இது மீண்டும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.
படுக்கைக்கு முன் பால் குடிப்பதும் நரம்புகளை தளர்த்த உதவுகிறது. ஹார்மோன் ஒரு நரம்பியக்கடத்தியாக செயல்படுகிறத. இது தூக்க சுழற்சியை ஒழுங்குபடுத்த உதவுகிறது. மேலும் பாலில் உள்ள புரோட்டீன் மூளையின் GABA என்னும் ஏற்பிகளைத் தூண்டுகிறது. இது பதட்டத்தைக் குறைக்கிறது மற்றும் ஆழ்ந்த தூக்கத்தைத் தூண்டுகிறது.
நெய் நன்மைகள் : பெரும்பாலான ஆயுர்வேத வைத்தியங்களில் நெய் நோய் அறிகுறிகளை சரி செய்ய உதவும் மூலப்பொருளாக இருக்கிறது. இது மூட்டுகளில் உண்டாகும் பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது மற்றும் சளி மற்றும் இருமலை குணமாக்க உதவுகிறது. மேலும் நெய் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த மூலமாகும், இது வெறிப்புற தொற்றுநோய்களை தடுக்கவும் உதவுகிறது.
நெய் மற்றும் பால் சேர்ப்பதன் நன்மைகள் : சூடான பாலில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்ப்பது செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. பால் மற்றும் நெய் ஆகியவற்றில் உள்ள நொதிகள் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும், உணவை செரிக்கவும் உதவுகிறது. இது மேலும் நரம்புகளை தளர்த்த உதவுகிறது மற்றும் ஆரோக்கியமான தூக்கத்தை உறுதி செய்கிறது.