பப்பாளியில் என்னற்ற நன்மைகள் இருப்பதை அனைவரும் அறிந்ததே. அதேசமயம் பப்பாளி மட்டுமன்றி அதன் மரமே மருத்துவ குணங்கள் அடங்கியதுதான். குறிப்பாக பப்பாளி இலை எண்ணற்ற இயற்கை வைத்தியங்களை உள்ளடக்கியது. மாத்திரைகளால் கூட சரி செய்ய முடியாத பிரச்னைகளை பப்பாளி இலை சரி செய்துவிடுகிறது. குறிப்பாக டெங்கு, டைஃபாய்டு போன்ற நோய்களுக்கு பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க பப்பாளி இலையின் சாறு முக்கிய பங்கு வகிக்கிறது.
பப்பாளி இலை ஜூஸ் எப்படி போடுவது..? ஃபிரெஷ் பப்பாளி இலைகள் மற்றும் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கல். இலைகளை துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். அதை மிக்ஸியில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மைய அரைத்து வடிகட்டி குடிக்கலாம். உங்களுக்கு டெங்கு போன்ற காய்ச்சல் இருப்பின் 100 ml ஜூஸை மூன்றாக பிரித்து நாளின் மூன்று வேளைகள் குடிக்கலாம். கசப்பாக இருப்பின் கொஞ்சம் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.