இன்றைய கால கட்டத்தில் மன அழுத்தம் என்பது மாபெரும் வியாதியாக உருவெடுத்து உள்ளது. யாரை கேட்டாலும் மனதில் நிம்மதியே இல்லை, மன கஷ்ட்டமாக உள்ளது, மனம் ஏதோ போன்று உள்ளது. இப்படி பல வகையான மன அழுத்தம் கொண்ட உணர்வுகளை கூறுவதுண்டு. இதை சரி செய்வதற்கு பலர் மருத்துவரை அணுகுவார்கள். இருப்பினும் மாத்திரைகளைக் காட்டிலும் நமது உடல் நலத்தை சில பாரம்பரிய முறைகளின் படி பாதுகாத்து கொள்ளலாம். இதற்கு அரோமா தெரபி என்கிற வழிமுறை பெரிதும் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த பதிவில் அரோமா தெரபி பற்றியும், அதன் பயன்கள் பற்றியும் விரிவாக பார்ப்போம்.
அரோமா தெரபி : இந்த வழிமுறையை செய்வதற்கு இயற்கை எண்ணெய்கள் அவசியம் தேவை. லெவெண்டர் எண்ணெய், டீ ட்ரீ ஆயில், லெமன் ஆயில், பெப்பர்மிண்ட் எண்ணெய் ஆகியவற்றில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். அடுத்து மூன்று முதல் ஐந்து சொட்டுக்கள் இந்த எண்ணெயை எடுத்து சிறிது தண்ணீருடன் சேர்த்து, 30-60 நிமிடங்களுக்கு இதை சுவாசிக்க வேண்டும். இந்த எண்ணெய்கள் அதிக வாசனை கொண்டவை.
நிம்மதியான தூக்கம் : மூளையின் செயல்பாடு மற்றும் நினைவாற்றலுக்கு நல்ல தூக்கம் அவசியமானது. எனவே அரோமா தெரபி செய்வதன் மூலம் நிம்மதியான தூக்கத்தை தருகிறது. லாவெண்டர் எண்ணெய்யை தூக்க பிரச்சனை உள்ளவர்கள் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்யை பயன்படுத்தி ஒரு சூடான குளியல் போடலாம். பிறகு நல்ல தூக்கம் கிடைக்கும்.