முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..?

வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..?

நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் அடிக்கடி வெந்நீர் குடிக்கும் படி நம்மை அறிவுறுத்துவதை நீங்கள் பார்க்க கூடும். வீட்டில் உள்ளவர்கள் மட்டுமின்றி, மருத்துவர்கள் பலரும் வெந்நீர் குடிப்பதன் முக்கியத்துவத்தை பற்றி

 • 17

  வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..?

  நாமக்கல் மக்களே க்காலம் தொடங்கி உள்ளதால் தண்ணீரை காய்ச்சி குடிக்க  அறிவுறுத்த" width="1200" height="800" /> நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் அடிக்கடி வெந்நீர் குடிக்கும் படி நம்மை அறிவுறுத்துவதை நீங்கள் பார்க்க கூடும். வீட்டில் உள்ளவர்கள் மட்டுமின்றி, மருத்துவர்கள் பலரும் வெந்நீர் குடிப்பதன் முக்கியத்துவத்தை பற்றி அவ்வபோது வலியுறுத்தி வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 27

  வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..?

  ஆனால் உண்மையிலேயே வெந்நீர் குடிப்பதால் நம் உடலுக்கு நன்மைகள் கிடைக்கின்றனவா என்ற சந்தேகம் இன்றும் பலரிடையே இருந்து வருகிறது. வெந்நீரை எப்போது குடிக்க வேண்டும் உணவுக்கு முன் குடிக்க வேண்டுமா, அல்லது உணவுக்குப் பின் வெந்நீர் குடிக்க வேண்டுமா என்பது போன்ற பல சந்தேகங்கள் இருக்கின்றன. இதை போலவே உடற்பயிற்சி செய்யும் நேரத்தில் வெந்நீர் குடிக்கலாமா என்ற சந்தேகமும் பலரிடையே இன்றும் நிலவி வருகிறது.

  MORE
  GALLERIES

 • 37

  வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..?

  அதே நேரத்தில் ஒரு சிலரை பொருத்தவரை ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கத்தை கடைபிடிப்பதற்கு பதிலாகவும், உடற்பயிற்சி செய்வதற்கு பதிலாகவும் அவ்வபோது வெந்நீரை பருகினாலே தேவையான பலன்கள் அனைத்தும் கிடைத்துவிடும் என்ற ஒரு தவறான எண்ணத்தை கொண்டு இருக்கின்றனர். எனவே இந்த பதிவில் வெந்நீரை எப்போது குடிக்க வேண்டும் என்பதை பற்றியும், வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றியும் பார்ப்போம்.

  MORE
  GALLERIES

 • 47

  வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..?

  வேகமான செரிமானத்திற்கு உதவுகிறது: உணவிற்கு பின் நாம் வெந்நீர் குடிக்கும் போது, அது உணவு செரிமானம் ஆவதை ஊக்குவிக்கிறது. உணவின் உள்ள மூலக்கூறுகள் மிக எளிதில் உடைக்கப்பட்டு, அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலினால் மிக எளிதாக உறிஞ்ச படுத்துவதற்கு ஏதுவாக இருக்கிறது. இதைத் தவிர நீண்ட காலமாக மலச்சிக்கினால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு வெந்நீர் ஒரு சிறந்த தீர்வாக அமையும்.

  MORE
  GALLERIES

 • 57

  வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..?

  நச்சுக்களை நீக்க உதவுகிறது: அவ்வப்போது வெந்நீர் குடிக்கும் போது அவை நமது உடலில் உள்ள நச்சுத்தன்மைகளை நீக்க உதவுகிறது. முக்கியமாக உணவிற்குப்பின் நம் வெந்நீர் குடிக்கும் போது செரிமானத்தினால் நம் உடலில் குறைந்துள்ள நீர்ச்சத்தை சரியான அளவில் வைக்க உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 67

  வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..?

  உடல் எடை குறைப்பிற்கு உதவுகிறது: இன்றைய நிலையில் உடல் எடையை குறைப்பதற்கு என்று பலரும் என்னென்னவோ விதமான வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். அவர்கள் அனைவருமே உணவிற்குப்பின் வெந்நீர் குடிக்கும் போது அது உடல் எடை குறைவதற்கு வழிவகுக்கிறது. சமீபத்தில் நடத்திய ஆய்வில், சாப்பிடுவதற்கு முன் நாம் வெந்நீர் குடிக்கும் பட்சத்தில் அவை நமது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை 32% வரை அதிகரிக்கிறது என தெரியவந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 77

  வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..?

  மாதவிடாய் வலியை குறைக்க உதவுகிறது: பெண்கள் மாதவிடாய் காலங்களில் உணவிற்குப்பின் வெந்நீரைக் குடிக்கும் போது அவை பெண்ணுறுப்பின் தசை பகுதிதியை இலகுவாக்குகின்றன. இதன் காரணமாக அங்கு ரத்த ஓட்டம் அதிகரித்து வலியை குறைக்க உதவுகிறது.

  MORE
  GALLERIES