சமீப காலமாக பலரையும் கீல்வாதம் என்று கூறப்படும் ஆர்த்தரைடிஸ் நோய் பாதித்து வருகிறது. மூட்டுகளில் வீக்கம், தேய்மானம், வலி, தசை பலவீனம் ஆகியவற்றால் ஏற்படும் ஆர்த்தரைடிஸ் நோய்க்கு நிரந்தர தீர்வு கிடையாது. நோய் என்று கூறுவதை விட, இதை குறைபாடு என்று கூறலாம். முழங்கால் வாதம், வீக்கம் என்று வந்தாலே, அன்றாட வேலைகளைக் கூட செய்ய முடியாத அளவுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படலாம்.
குறிப்பாக, வயதானவர்களுக்கு ஏற்படும் ஆர்த்தரைடிஸ், அவர்கள் உட்கார்ந்து எழுந்தால் கூட தீவிரமான வலியை ஏற்படுத்தும். எனவே, ஆர்த்தரைட்டிஸ் வந்தாலே, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பரவலாக கூறப்படுகிறது. ஆனால், இந்த குறைபாட்டுக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. உணவுக் கட்டுப்பாடு, ஃபிசிகல் தெரபி முதல் வாழ்க்கை முறை மாற்றங்கள் வரை பல சிகிச்சை முறைகள் உள்ளன. அறுவை சிகிச்சை இல்லாமல், ஆர்த்தரைடிஸ் குறைபாட்டை எவ்வாறு சரி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.
அறுவை சிகிச்சையை தவிர்க்க வேண்டும் ஆனால் தீவிரமான பாதிப்புகள் இருப்பவர்களுக்கு ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள், வலி நிவாரணியாக ஓபியாய்டுகள், வலி குறைக்க மூட்டுகளில் பூசப்படும் கிரீம், ஜெல் போன்றவை பரிந்துரைக்கப்படும்.நடப்பதற்கு வாக்கிங் ஸ்டிக், ஊன்றுகோல், மூட்டுகளுக்கான பிரேஸ்கள் ஆகியவை சப்போர்ட்டாக இருக்கும்.