பரபரப்பான வேலைகளுக்கு மத்தியில் திடீரென்று ஏற்படும் தலைவலி நம்முடைய இயல்பு வாழ்க்கையில் குறுக்கிடுவதோடு, கவலையையும் ஏற்படுத்தும். திடீர் தலைவலிக்கு காரணமாக பரபரப்பான வாழ்க்கை, சீரற்ற தூக்க சுழற்சி, அதிக ஸ்கிரீனிங் டைம் அல்லது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் என பல வாழ்க்கை முறை சிக்கல்கள் இருக்கின்றன.
இலவங்கம் : நம்முடைய வீட்டின் அன்றாட சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் லவங்கத்தை உங்கள் பானங்கள் அல்லது டீ-யில் பயன்படுத்துவதன் மூலம் அல்லது லவங்க பவுடரை நெற்றியில் பத்து போடுவதன் மூலமோ, திடீரென்று ஏற்படும் மோசமான தலைவலியை குணப்படுத்தலாம். ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த இந்த லவங்கம்அதன் சக்திவாய்ந்த மருத்துவ குணங்கள் மற்றும் வலுவான நறுமணத்துடன் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த உதவுகிறது.
உங்களது திடீர் தலைவாழை மிகவும் மோசமாகிவிட்டால் தலைவலியை போக்க உங்கள் கிரீன் டீயில் ஒரு துளி இலவங்கப்பட்டை ள்ளது பவுடர் சேர்க்கவும். அதே போல இலவங்கப்பட்டையை வறுத்து பின் மிக்சியில் அரைத்து பவுடராக்கி கொண்டு தண்ணீருடன் கலந்து பேஸ்ட்டாக செய்து, அதை நெற்றியில் தடவி படுத்து ஓய்வெடுங்கள். பின் வெதுவெதுப்பான நெற்றியை கழுவுவது உடனடி நிவாரணம் அளிக்கும்.
இஞ்சி : ஆன்டிஆக்சிடன்ட்ஸ் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இஞ்சியில் நிறைந்து காணப்படுகிறது. இஞ்சி டீ அல்லது இஞ்சி ஜூஸ் மோசமான தலைவலியை விரைவாக குணப்படுத்தும் தன்மை கொண்டவை. வெதுவெதுப்பான இஞ்சி டீ குடிப்பது தலைவலி காரணமாக ரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. அதே போல சளி அல்லது காய்ச்சலால் ஏற்படும் தலைவலிக்கு இஞ்சி சாறு, கருமிளகு, எலுமிச்சை சாறு கலந்து வெந்நீரில் சேர்த்து பின் ஆவியில் வேக வைத்து ஜிஞ்சர் பில்ஸ்களை தயாரிக்கலாம். இது மூக்கடைப்பை சரி செய்யவும் உதவுகிறது.
கிராம்பு : காரமான சுவையடைய கிராம்பு மோசமான தலைவலியை கூட குணப்படுத்தும் அற்புத மூலிகை மசாலாவாக இருக்கிறது. புதினா இலைகள் மற்றும் கிராம்புகளை மிக்ஸ் செய்து தயாரிக்கப்படும் டீ-யானது தலைவலி காரணமாக ரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும், மோசமான தலைவலியை சரி செய்யவும் உதவுகிறது. தவிர சளி மற்றும் இருமல் சார்ந்த தலைவலி ஏற்பட்டால் ஒரு துணியை எடுத்து நைஜெல்லா விதைகள் அதாவது கருஞ்சீரகத்துடன் கிராம்புகளை நசுக்கி வைக்கவும். பின் அந்த துணியை கட்டி அதை நுகர்ந்தால் சைனஸ் அடிப்படையிலான தலைவலியையும் கூட குணப்படுத்தும்.