இரண்டு நாட்களுக்கும் மேலாக தீவிர காய்ச்சல், அதீத இருமலுடன் வரும் குழந்தைகளுக்கு நுரையீரல் தொற்று இருப்பதோடு, சில குழந்தைகளுக்கு மூச்சுத் திணறலும் ஏற்படுகிறது. அவர்களுக்கு ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய தேவை இருப்பதோடு, சில நேரங்களில் அதீத அழுத்தம் கொண்ட ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய சூழலும் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் கொரோனாவுக்கு பிறகு உடலில் நோய் ஏற்படும் தன்மை பெரிதாக மாறியிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்ததால், உடலின் எதிர்ப்பு சக்தியில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறும் அவர்கள், தேவையான எதிர்ப்பு சக்தி உருவான பிறகு, இதுபோன்ற பாதிப்புகள் படிப்படியாக தணிந்துவிடும் என்றும் தெரிவிக்கின்றனர்.