ஆனால், உங்களுக்கு சிறுநீரக பாதிப்புகள் இருந்து, அவ்வப்போது ரத்த சுத்திகரிப்பு என்னும் டயாலிசிஸ் சிகிச்சையை மேற்கொண்டு வருகிறீர்கள் என்றால் நீங்கள் சாப்பிடும் உணவு குறித்து நீங்கள் கவனமாக இருப்பது அவசியம். அதிக அளவில் புரதம் உட்கொள்வது, உப்பை குறைத்துக் கொள்வது, பாஸ்பரஸ் மிகுந்த உணவுகளை தவிர்ப்பது, பொட்டாசியம் சத்து குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது போன்ற மாற்றங்களை நீங்கள் செய்ய வேண்டியிருக்கும். அந்த வகையில் உங்கள் உடல் நலனுக்கு ஏதுவான 5 உணவுகள் இதோ.
வெங்காயம் : மிக அதிகமான கிரியேட்டினின் அளவுகள் மற்றும் மோசமான சிறுநீரக செயல்பாடு கொண்ட நபர்களுக்கு மிக சிறப்பான உணவு வெங்காயம் ஆகும். இதில் உள்ள புரோஸ்டகிளாண்டின் என்னும் பொருள் நம் ரத்தத்தின் விஸ்காசிட்டியை குறைக்கிறது. இதனால், உயர் ரத்த அழுத்தம் குறைவதுடன், சிறுநீரக நோய்களும் கட்டுப்படுத்தப்படுகிறது.
பூண்டு : சிறுநீரக பாதிப்பு கொண்ட மக்கள் சோடியம் சத்துள்ள பொருட்களை தவிர்க்க வேண்டும். குறிப்பாக உப்பு கட்டுப்பாடு அவசியம். உப்பு இல்லாத உணவுக்கு சுவையும், மனமும் தரக் கூடியது பூண்டு ஆகும். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளன. இது மட்டுமல்லாமல் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை பூண்டு கரைக்கும் தன்மை கொண்டது.
கேரட் : சிறுநீரக செயலிழப்புக்கு ஹைப்பர் டென்சனும் மிக முக்கியமான காரணம் ஆகும். நீண்டகால சிறுநீரக பாதிப்பு உள்ள மக்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது அவசியம். அந்த வகையில் ரத்த அழுத்தத்தை குறைப்பதில் கேரட் அபார செயல்பாடு கொண்டது. சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகை செய்யும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதிலும் கேரட் சிறப்பாக செயல்படுகிறது.
ஆலிவ் எண்ணெய் : உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புச் சத்து நிறைந்துள்ள ஆலிவ் எண்ணெய்யில் பாஸ்பரஸ் என்பதே கிடையாது. ஆகவே, சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் ஆலிவ் எண்ணெய்யை உணவில் சேர்த்து கொள்ளலாம் கொள்ளலாம். ஆக, சமையலுக்கு மற்ற எண்ணெய்களை உபயோகிப்பதைக் காட்டிலும் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம். சிறுநீரக நோய் பாதிப்புள்ளவர்களுக்கு இது நல்லதொரு ஆரோக்கியத்தை தரும்.