நம் உடல் இயக்கம் முறையாக நடைபெறுவதற்கு தேவையான ராஜ உறுப்புகளுள் ஒன்றுதான் சிறுநீரகங்கள் ஆகும். நம் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளையும், அசுத்தங்களையும் வெளியேற்றி, உடலுக்கு தேவையான எலெக்ட்ரோலைட்டுகளை பராமரிப்பது தான் சிறுநீரகங்களின் பணி ஆகும். சிறுநீரக கல் என்பது சிறுநீர் குழாய் அல்லது சிறுநீரகத்தில் படியும் கிறிஸ்டல் போன்ற மினரல் பொருள் ஆகும்.
சிறுநீரக குழாயில் உள்ள கிறிஸ்டல்கள் ஒன்றோடு, ஒன்று சேருவதை தடுக்கும் ரசாயனம் போதுமான அளவில் நம் சிறுநீரில் இல்லை என்றாலும் இத்தகைய கற்கள் ஒன்று சேர்ந்துவிடும். பெரும்பாலான நபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை என்பது கால்சியம் ஆக்ஸலைட் கற்கள் ஆகும். பொதுவாக சிறுநீரக கற்கள் தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும் என்றாலும், வீட்டு முறை சிகிச்சைகளில் இதை கரைக்க முடியும்.
எலுமிச்சை சாறு : சிட்ரஸ் வகை பழங்களில் எலுமிச்சையில் தான் மிக அதிகப்படியான சிட்ரேட் சத்து இருக்கிறது. இது சிறுநீரகத்தில் கற்கள் சேருவதை தடுக்கிறது. மற்ற பழங்களில் சிறுநீரக கல் உருவாகுவதற்கான ஆக்ஸலேட் சத்து இருக்கிறது. ஆகவே, சிட்ரேட் சத்து கொண்ட எலுமிச்சை சாறு நல்ல பலனை தரும். நாள் ஒன்றுக்கு 2 லிட்டர் தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் உருவாகுவதை தடுக்க முடியும்.
குடிநீர் : நம் உடலில் கல்லீரல் மற்றும் மூளை உள்பட அனைத்து உறுப்புகளும் மிக சிறப்பாக இயங்குவதற்கு இன்றியமையாத ஒன்று குடிநீர் ஆகும். மேலும், உடலில் உள்ள அசுத்தங்களை சிறுநீர் வழியாக வெளியேற்றும் சிறுநீரகங்களுக்கும் குடிநீர் அவசியமாகும். நாம் போதுமான அளவு தண்ணீர் குடித்தால் தான் நமது சிறுநீரகங்கள் அசுத்தங்களை வெளியேற்ற முடியும். ஆகவே, சராசரியாக ஒரு ஆண் நாளொன்றுக்கு 3.7 லிட்டர் தண்ணீரும், ஒரு பெண் 2.7 லிட்டர் தண்ணீரும் அருந்துவது அவசியமாகும்.
மாதுளைச் சாறு : அல்சர் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை சீர் செய்வதற்கு அடிக்கடி பயன்படும் ஒரு பொருள் மாதுளம் பழச்சாறு ஆகும். ஏனென்றால் இது கால்சியம் ஆக்ஸலேட் பொருளை குறைக்கிறது. ஆகவே, இதை எடுத்துக் கொள்ளும்போது சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவது தடுக்கப்படுகிறது. சிறுநீரின் அசிடிட்டி அளவையும் இது குறைக்கிறது.
ராஜ்மா : கிட்னி பீன்ஸ் என்று சொல்லக் கூடிய இந்த ராஜ்மா விதைகள் என்பது நம் சிறுநீரக அமைப்பை போலவே இருக்கும். நமது சிறுநீரகத்தில் உள்ள கற்களை வெளியேற்றி, சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் தன்மை ராஜ்மா விதைகளில் இருக்கிறது. உடல் எடையை குறைப்பதற்கும் மிக உதவியாக இருக்கும். ராஜ்மாவில் உள்ள கரையும் நார்ச்சத்து மற்றும் கரையா நார்ச்சத்து ஆகிய இரண்டும் நம் குடல் நலனுக்கு உகந்தது.
சீமை காட்டு முள்ளங்கி : டேண்டேலியன் என்று சொல்லக் கூடிய சீமை காட்டு முள்ளங்கி ஜூஸ் அருந்துவதும் சிறுநீரக கற்களை வெளியேற்றுவதற்கு உதவும். இதில் உள்ள விட்டமின் ஏ, பி, சி, டி மற்றும் பொட்டாசியம், இரும்புச்சத்து, ஜிங்க் ஆகிய சத்துக்கள் உடலுக்கு நன்மை தருவதாகும். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற இந்த ஜூஸ் உதவியாக அமைகிறது.