ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » எனது க்யூட்னஸுக்கு இது தான் காரணம் … டயட் ப்ளானைப் பகிரும் KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி...

எனது க்யூட்னஸுக்கு இது தான் காரணம் … டயட் ப்ளானைப் பகிரும் KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி...

உடலை பிட்டாக வைத்திருக்க என்ன உணவு முறையை நீங்கள் பின்பற்றுகிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகை ஸ்ரீநிதி, கார்போஹைட்ரேட்டுகள், புரதம், பழங்கள் மற்றும் காய்கறிகளின் சீரான உணவுடன் ஒரு நாளைக்கு 2 வேளைத் தான் சாப்பிடுவேன் என பதிலளித்தார்.

 • 16

  எனது க்யூட்னஸுக்கு இது தான் காரணம் … டயட் ப்ளானைப் பகிரும் KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி...

  வழக்கமான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, பழங்கள், காய்கறிகள், பச்சைப்பயறு போன்றவற்றை தினமும் சாப்பிடும் பழக்கம் தான் உடலை ஃபிட்டாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது என்கிறார் KGF புகழ் நடிகை ஸ்ரீநிதிஷெட்டி..

  MORE
  GALLERIES

 • 26

  எனது க்யூட்னஸுக்கு இது தான் காரணம் … டயட் ப்ளானைப் பகிரும் KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி...

  KGFல் “வா வா என் அன்பே“ என்ற பாடல் மூலம் இளம் ரசிகர்களை கொள்ளைக்கொண்டவர் தான் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. கட்டுக்கோப்பான உடல் அமைப்போடு பார்ப்பதற்கு க்யூட்டாக இருக்கும் ஸ்ரீநிதி, திரையுலகிற்கு என்ட்ரி ஆவது முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு மிஸ் சுப்ரநேஷனல் போட்டியில் அழகி பட்டத்தை வென்றார். அதே ஆண்டில் மிஸ் திவா சுப்ரநேஷனல் பட்டத்தை வென்ற பெருமைக்குரியவரானார். பின்னர் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கேஜிஎஃப் 1 மற்றும் கேஜிஎஃப் 2 படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் ஸ்ரீநிதி ஷெட்டி. மேலும் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா படத்திலும் நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 36

  எனது க்யூட்னஸுக்கு இது தான் காரணம் … டயட் ப்ளானைப் பகிரும் KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி...

  திரையுலகில் கால்பதித்துள்ள நடிகைகள் உடலை ஃபிட்டாக வைத்து கொள்வதற்கு முயல்வது போன்று ஸ்ரீநிதி ஷெட்டியும் மேற்கொள்வார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்த ஸ்ரீநிதி, படப்பிடிப்பு இருந்தாலும் என்னுடைய உடற்பயிற்சியை முறையாக மேற்கொள்வேன் என்றார். மேலும் மாலையில் வீடு திரும்பியதும் முகம் மற்றும் தோலைப் பராமரிப்பதில் அக்கறையுடன் இருப்பேன் என தெரிவிக்கும் இவர், படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் ஜிம்மிற்கு செல்வேன் என்று கூறியுள்ளார். மேலும் மனதை நிம்மதியாக வைத்து கொள்வதற்கு புத்தக வாசிப்பு, நண்பர்களுடன் உரையாடுவது போன்றவற்றை மேற்கொள்வேன் என்கிறார்.

  MORE
  GALLERIES

 • 46

  எனது க்யூட்னஸுக்கு இது தான் காரணம் … டயட் ப்ளானைப் பகிரும் KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி...

  உடலை பிட்டாக வைத்திருக்க என்ன உணவு முறையை நீங்கள் பின்பற்றுகிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகை ஸ்ரீநிதி, கார்போஹைட்ரேட்டுகள், புரதம், பழங்கள் மற்றும் காய்கறிகளின் சீரான உணவுடன் ஒரு நாளைக்கு 2 வேளைத் தான் சாப்பிடுவேன் என பதிலளித்தார். குறிப்பாக காலை உணவை மதியம் 12 மணிக்கு மேல் தான் சாப்பிடுவேன் எனறும், மதிய உணவு அதற்கு அடுத்துத்தான் என்கிறார்.. மேலும் பச்சைப்பயறு அடிக்கடி சாப்பிடுவேன் எனவும் இது தான் என்னுடைய உடல் ஃபிட்டாக இருக்க உதவுகிறது என்று பெருமையுடன் கூறுகிறார்.

  MORE
  GALLERIES

 • 56

  எனது க்யூட்னஸுக்கு இது தான் காரணம் … டயட் ப்ளானைப் பகிரும் KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி...

  மேலும் சமைப்பது மற்றும் ருசியான உணவுகளை உட்கொள்வது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் என்னால் சமைப்பதற்கு நேரம் கிடைக்காது எனவும் பேட்டியில் தெரிவித்திருந்தார். இவ்வாறு தன்னுடைய உடல் நலத்தை அக்கறையோடு பார்த்து கொள்வது தான் சினிமா இன்டஸ்ரியில் கால்பதித்து நிற்க முடிகிறது என்ற பெருமையுடன் அவரது வாழ்க்கையில் மேற்கொள்ளும் விஷயங்களைப் பகிர்கிறார் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி.

  MORE
  GALLERIES

 • 66

  எனது க்யூட்னஸுக்கு இது தான் காரணம் … டயட் ப்ளானைப் பகிரும் KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி...

  இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் நடிகர் யாஷ் வுடன் கேஜிஎஃப் முதல் பாகத்தில் நடிகை என்ற பெயருக்கு தலைக்காட்டி சென்ற இவருக்கு அடித்த ஜாக்பாட் கேஜிஎஃப் இரண்டாம் பாகம். அழகான ஆடைகளோடு வலம் வந்த இவரை இளம் ரசிகர்கள் கொண்டாடினார். மேலும் இயக்குனர் மற்றும் நடிகர் யாஷ் இப்படத்திற்கு அடுத்து தங்களது சம்பளத்தை உயர்த்தியது போல், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியும் உயர்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES