முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » ஜோ பைடனுக்கு தோல் புற்றுநோய் அகற்றம்... எப்படி கண்டுபிடிப்பது? என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? விரிவான தகவல்..!

ஜோ பைடனுக்கு தோல் புற்றுநோய் அகற்றம்... எப்படி கண்டுபிடிப்பது? என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? விரிவான தகவல்..!

பாசலியோமா என்பது ஒரு வகை தோல் புற்றுநோயாகும். இது மேல்தோலின் வெளிப்புற பகுதியான அடித்தள செல் அடுக்கில் உருவாகிறது.

  • 16

    ஜோ பைடனுக்கு தோல் புற்றுநோய் அகற்றம்... எப்படி கண்டுபிடிப்பது? என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? விரிவான தகவல்..!

    அமெரிக்க அதிபர் ஜோ-பைடனுக்கு பாலியோமா என்கிற தோல் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. இந்த நோய்த் தொற்று ஏற்படுத்தும் செல்கள் கடந்த பிப்ரவரி மாதம் வெற்றகரமாக அகற்றப்பட்டுவிட்டதாக ஜோ பைடனின் தோல் மருத்துவர் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதென்ன பாசலியோமா? அதை எப்படி அடையாளம் காண்பது … பார்க்கலாம்..

    MORE
    GALLERIES

  • 26

    ஜோ பைடனுக்கு தோல் புற்றுநோய் அகற்றம்... எப்படி கண்டுபிடிப்பது? என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? விரிவான தகவல்..!

    பாசலியோமா என்பது ஒரு வகை தோல் புற்றுநோயாகும். இது மேல்தோலின் வெளிப்புற பகுதியான அடித்தள செல் அடுக்கில் உருவாகிறது. இந்த கட்டிகள் பொதுவாக சூரிய ஒளிபடும் பகுதிகளில், குறிப்பாக முகம், உச்சந்தலை, காதுகள், கழுத்து, தோள்கள் மற்றும் முதுகு போன்ற புற ஊதா கதிர்வீச்சுக்கு தொடர்ந்து உள்ளாகும் பகுதிகளில் ஏற்படுகிறது. பாசல் செல் கார்சினோமா என்னும் செல்களால் இந்த நோய் ஏற்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 36

    ஜோ பைடனுக்கு தோல் புற்றுநோய் அகற்றம்... எப்படி கண்டுபிடிப்பது? என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? விரிவான தகவல்..!

    பாசல் செல் கார்சினோமாவை ஒருவர் எவ்வாறு அடையாளம் காண முடியும் ? : பாசல் செல் கார்சினோமா பொதுவாக தோலில் ஏற்படும் மாற்றமாகவோ, அசாதாரண வளர்ச்சியாகவோ அல்லது இரத்தம் கசிந்து குணமடையாத புண்களாகவோ தோன்றும். இது பல்வேறு தோற்றங்களில் தோலில் தோன்றலாம். இதை அடையாளம் காண சில அம்சங்களை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். தோலில் பளபளப்பான நிற மாற்றம் ஏற்பட்டு சிறிய அளவிலான ஒளி ஊடுருவும் வகையிலான சிறிய கட்டிகள் தோன்றும். பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் பரு போன்ற மாற்றமோ, தட்டையான இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் நடுவில் சிறிய குழியுடன் கூடிய சிறிய செதில் போன்ற புள்ளி தோன்றும்.

    MORE
    GALLERIES

  • 46

    ஜோ பைடனுக்கு தோல் புற்றுநோய் அகற்றம்... எப்படி கண்டுபிடிப்பது? என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? விரிவான தகவல்..!

    மேலும், வெள்ளை நிறத்தில் மெழுகு போன்ற, ஒழுங்கற்ற வடிவம் கொண்ட வடு போன்ற புண் ஏற்படும். சிறிய அளவில் தோன்றும் இது போன்ற கட்டிகள் மெதுவாக வளர்ச்சியடையும். வளர்ந்து வலியேதும் அற்ற புண்ணாக மாறும். இந்த அறிகுறிகள் நம் தோலில் தோன்றினால் உடனடியாக தகுந்த மருத்துவரை அணுக வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 56

    ஜோ பைடனுக்கு தோல் புற்றுநோய் அகற்றம்... எப்படி கண்டுபிடிப்பது? என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? விரிவான தகவல்..!

    பாசல் செல் கார்சினோமா எவ்வளவு தீவிரமானதா..?
    பொதுவாக பாசலியோமா புற்று நோய் உயிருக்கு ஆபத்தானது அல்ல. மெலனோசைட்டுகளில் எனப்படும் நிறமி செல்களில் இருந்து உருவாகி மிகவும் தீவிரமாக இருக்கும் மெலனோமாவைப் போலல்லாமல், இந்த வகை தோல் புற்றுநோய் உட்புறத்தில் உருவாகிறது. ஆனால் இது உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவவுவதில்லை.

    MORE
    GALLERIES

  • 66

    ஜோ பைடனுக்கு தோல் புற்றுநோய் அகற்றம்... எப்படி கண்டுபிடிப்பது? என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? விரிவான தகவல்..!

    இருப்பினும், சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது ஆழமாக வளர்ந்து, நரம்புகள், இரத்த நாளங்களைத் தொடும் மற்றும் எலும்பு மஜ்ஜைகளை அடைந்து, அதை சிதைக்கும். எனவே, ஆரம்பகால சிகிச்சை பாசலியோமாவைத் தடுப்பதற்கான முதல் ஆயுதமாக உள்ளது. மேலும் சூரிய ஒளியில் வெளிப்படும் பகுதிகளை மட்டும் அவ்வப்போது சுய-கண்காணிப்புடன் நாம் பார்த்துக் கொள்வது நல்லது.

    MORE
    GALLERIES