பிரசவத்தின்போதும் அதற்குப் பிறகும் ஒரு பெண்ணின் உடல்வாகு எண்ணற்ற வழிகளில் மாறுகிறது. மேலும் தாய்ப்பால் கொடுக்கும் பல பெண்கள் மார்பக வடிவத்தில் மாற்றம் மற்றும் மார்பக தொய்வை அனுபவிப்பதாக நம்பி வருகின்றனர். இருப்பினும், இந்த நம்பிக்கை ஒரு கட்டுக்கதையே. உண்மையில், அழகியல் அறுவை சிகிச்சை எனும் இதழில் கடந்த 2008ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, தாய்ப்பால் மார்பக தொய்வு அபாயத்தை அதிகரிக்காது என்று குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், பெரும்பாலான பெண்கள் கர்ப்பத்திற்குப் பிறகு தாய்ப்பால் கொடுக்கிறார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் மார்பக தொய்வை அனுபவிக்கிறார்கள். ஏனென்றால், கர்ப்ப காலத்தில் மார்பகங்கள் அளவு வளரும், ஏனெனில் பால் உற்பத்தி செய்யும் சுரப்பிகள் மற்றும் மார்பக திசுக்கள் பெரிதாவதன் மூலம் ஒரு பெண்ணின் உடலை குழந்தையின் சேவைக்காக தயார் ஆகிறது. தாய்ப்பால் கொடுக்கும் நர்சிங் கட்டத்திற்குப் பிறகு, ஒரு தாயின் கர்ப்ப எடை குறையத் தொடங்கும். மேலும், சுரப்பிகள் மற்றும் மார்பக திசுக்கள் இயல்பான அளவிற்கு சுருங்கும்போது, ஒருவர் மார்பக தொய்வை சந்திக்க நேரிடலாம்.
சௌகரியமான பிராவை அணிந்திடுங்கள்: (Make a supportive Bra Your Best Friend) : கர்ப்ப காலம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் கட்டத்தில், எந்த ஒரு வலியையோ, காயத்தையோ தவிர்க்க அதிகபட்ச சௌகரியத்தை வழங்கும் பிராவைத் தேர்வு செய்வது அவசியம். எனவே, இந்த கட்டத்தில் உங்கள் ப்ராவை சரியாகத் தேர்ந்தெடுப்பது உண்மையில் பிற்காலத்தில் மார்பக தொய்வைத் தடுக்க உதவும்.
எடையைக் குறைக்க நேரம் ஒதுக்குங்கள்: (Take Time to Shed Your Baby Weight) : இப்போதெல்லாம் பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் கர்ப்பகாலத்தில் பெற்ற அதிக கொழுப்பை குறைக்க ஒரு ஆபத்தான ட்ரெண்டை பின்பற்றி வருகின்றனர். எந்த ஒரு விஷயத்திலும் அவரச தீர்வு காண நினைத்தால் அது தீமையில் தான் முடிவடையும். அதேபோல ஒவ்வொருவரின் உடல் அமைப்புகளில் மாற்றத்தை கொண்டுவர சிறிது காலம் பிடிக்கும். அதுவரை பெண்கள் பொறுமையாக செயல்பட வேண்டும். திடீரென ஏற்படும் உடனடி எடை இழப்பு மார்பகங்களில் மட்டுமல்ல, உடலின் மற்ற பகுதிகளிலும் கடுமையான தொய்வை ஏற்படுத்தும்.
புகைபிடிப்பதை நிறுத்துங்கள்: (Stop Smoking) : பொதுவாக, புகையிலையின் பயன்பாடு சருமத்தின் பழுதுபார்க்கும் திறன் மற்றும் மீளுருவாக்கத் திறனைத் தடுக்கிறது. ஏனெனில் புகைப்பிடித்தல் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உடைப்பைத் தூண்டுகிறது. எனவே, நீங்கள் உங்கள் கர்ப்ப எடையைக் குறைத்து, உங்கள் முந்தைய வடிவத்தை மீண்டும் பெற முயற்சிக்கும்போது, குடிப்பழக்கத்தால் உங்கள் தோல் நெகிழ்ச்சித்தன்மையை இழந்திருக்கலாம். அது, மார்பகங்களில் கடினமான தொய்வை ஏற்படுத்தும். எனவே, புகைபிடிப்பதை நிறுத்துவது மார்பகங்களில் தொய்வு ஏற்படுவதையும் மற்ற உடல் பாகங்களின் தொய்வை தடுக்கவும் உதவி புரிகிறது.
வழக்கமான உடற்பயிற்சி மற்றும் நல்ல தோரணையை பராமரிக்கவும்: (Exercise Regularly and Maintain Good posture) : உங்கள் மார்பகங்களை இறுக்கமாகவும் உறுதியாகவும் வைத்திருக்க உதவும் வகையில் பல யோகா ஆசனங்கள் மற்றும் பிற உடற்பயிற்சிகளும் உள்ளன. உங்கள் மார்பகங்களை நல்ல வடிவத்திலும் அளவிலும் பெற உடற்பயிற்சி செய்யத் தொடங்குங்கள். ஒரு நல்ல தோரணை உடல் பாகங்கள் தொய்வடைவதைத் தடுக்கலாம்.
ஈரப்பதமாக்குதல் மற்றும் இறந்த செல்களை நீக்குதல்: (Moisturize and Exfoliate) : எக்ஸ்போலியேட் மூலம் இறந்த செல்களை நீக்குவது மற்றும் உங்கள் மார்பகங்களை மாயிஸ்ச்சரைஸ் செய்வதன் மூலம் மிருதுவாகவும் நன்கு ஈரப்பதமாகவும் வைத்திருப்பது மிக முக்கியம். அதேபோல, மார்பக மசாஜ் இரத்த ஓட்டத்திற்கும் உதவுகிறது. இந்த சிறிய சுய-கவனிப்பு செயல்கள் உங்கள் மார்பகங்களை நல்ல வடிவத்தில் வைத்திருப்பது மட்டுமல்லாமல் அவற்றின் தோலை மென்மையாகவும் அழகாகவும் மாற்ற உதவுகிறது.