நமது அன்றாட உணவில் காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களை சேர்த்து கொண்டாலும் அனைவரும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை பெறுகிறார்களா என்பது கேள்விக்குறியே. எனவே மக்கள் போதுமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைப் பெறுவதை உறுதிப்படுத்த, தங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க அல்லது மேம்படுத்த வைட்டமின், மினரல் சப்ளிமெண்ட்ஸ்களை எடுத்து கொள்கிறார்கள்.
அன்றாட உணவுகளிலிருந்து ஒருவர் பெற முடியாத தவறவிட்ட ஊட்டச்சத்துக்களை ஈடு செய்ய இந்த சப்ளிமெண்ட்ஸ்கள் எடுத்து கொள்ளப்படுகின்றன. ஆனால் உடல்நலப் பிரச்சனைகள் ஏதுமின்றி இருப்பவர்கள் சப்ளிமெண்ட்ஸ்களை எடுத்து கொள்வதை விட ஆரோக்கிய டயட் சிறந்தது என்று சிலர் நினைக்கிறார்கள். வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் மனிதனின் உடல் செயல்பாடுகளுக்கு அவசியமானவை தான். ஆனால் உண்மையில் வைட்டமின், மினரல் சப்ளிமெண்ட்ஸ்கள் பயனுள்ளதா? என இங்கு தெரிந்து கொள்வோம்.,
உங்களுக்கு சப்ளிமெண்ட்ஸ் உண்மையில் வேண்டுமா?சப்ளிமெண்ட்ஸ் என்பவை உண்மையில் ஒரு சமச்சீரான, ஆரோக்கியமான டயட்டிற்கு மாற்றாக இருக்காது என்று கூறுகிறார் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் மருத்துவப் பேராசிரியரும், தொற்றுநோயியல் பேராசிரியருமான டாக்டர். ஜான் மேன்சன். மேலும் கூடுதல் பலன்களை அளிக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை நடைமுறைகளில் இருந்து கவனத்தை சப்ளிமெண்ட்ஸ் சிதறடிக்கும். சப்ளிமெண்ட்ஸ் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று நம்பப்பட்டாலும், பல ஆராய்ச்சி ஆய்வுகள் இவை எந்த ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன என்கிறார்.
தேவைக்கதிகமான ஊட்டச்சத்துக்கள்: பரபரப்பான வாழ்க்கையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அடங்கிய ஒவ்வொரு உணவையும் தனித்தனியாக இணைப்பது கடினம். என்றாலும், நீண்ட காலத்திற்கு நம் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தவறவிட முடியாது. இந்த விஷயத்தில் சப்ளிமெண்ட்ஸ் தீர்வாக தெரிகிறது. ஆனால் பல சமயங்களில் நாம் நம் உடலில் தேவைக்கதிகமான ஊட்டச்சத்துக்களால் நிரப்பி விடுகிறோம். நம் உடல் போதுமான ஊட்டச்சத்துக்களை பெற்றுள்ளதா? என்பதை கவனிக்காமல் சப்ளிமெண்ட்ஸ்களை பலர் எடுத்து கொள்கிறார்கள்.
சப்ளிமெண்ட்ஸை சார்ந்திருப்பதால் உண்மையான உணவு பலன்களில் இழப்பு : நமது உணவில் வைட்டமின்கள், தாதுக்கள் மட்டும் இல்லை. நாம் உண்ணும் உணவில் இருந்து மைக்ரோ மற்றும் மேக்ரோநியூட்ரியண்ட் எலிமெண்ட்ஸ்களும் நம் உடலுக்கு கிடைக்கின்றன. ஃபைபர் போன்ற இயற்கையான அத்தியாவசிய சத்து பல உணவுப் பொருட்களில் ஏராளமாகக் காணப்படுகின்ற. மலச்சிக்கல் போன்ற குடல் இயக்கப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இந்த உணவுகள் வரம்.
கூடுதலாக சப்ளிமெண்ட்ஸ் சாப்பிடுவது ஒருவரை ஆரோக்கியமாக மாற்றுகிறதா.? உடலுக்குள் அதிகமாக செல்லும் எதுவும் ஒன்று வெளியே வந்து விடும் அல்லது உடலுக்குள் குவிந்து நச்சு தன்மையை உருவாக்கும். குறிப்பாக வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே உள்ளிட்டவற்றை அதிகமாக உட்கொள்வது உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. அதிக கால்சியம் சிறுநீரக கற்கள் அபாயத்தை அதிகரிக்கலாம், கூடுதல் வைட்டமின் டி சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கலாம். ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் வைட்டமின் பி6 எடுத்து கொள்வது நரம்பு சேதத்தை ஏற்படுத்தலாம். எனவே தேவைகள அதிகமாக சில சத்துக்களை எடுத்து கொள்வது ஆரோக்கியத்தை தருவதற்கு பதில் உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
சப்ளிமெண்ட்ஸை நீங்கள் சுய மருத்துவமாக செய்கிறீர்களா? ஆம், எனில் இப்போதே நிறுத்தி விடுங்கள். சப்ளிமெண்ட்ஸ் எடுத்து கொள்வதற்கு முன் மருத்துவரை அணுக வேண்டிய அவசியத்தை பலர் உணரவில்லை. ஆய்வின்படி, ஆண்டுக்கு சும்மர் 23,000-க்கும் மேற்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு நோயாளிகள் உணவுப் பொருட்களுடன் தொடர்புடைய பாதகமான நிகழ்வுகள் காரணமாக பாதிக்கப்படுகிறார்கள்.
அப்படி என்றால் சப்ளிமெண்ட்ஸ் பணத்தை வீணடிக்கும் ஒன்றா? இல்லை, சப்ளிமெண்ட்ஸை யார் எடுக்கிறார்கள் என்பதை பொறுத்தது. மருத்துவச் சிக்கல்கள் அல்லது உணவுக் கட்டுப்பாடுகள் இல்லாத ஆரோக்கியமான நபர் என்றால், ஆரோக்கியமான உணவுகளை வேண்டுமென்றே தவிர்க்கும் வரை ஊட்டச்சத்து குறைபாடு இருக்காது. அதே சமயம் மருந்து உட்கொள்பவர்கள், சில வகை உணவுகளை உண்ண கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளவர்கள், சைவ உணவு உண்பவர்கள், வயதானவர்கள் மற்றும் சில காரணங்களால் குறிப்பிட்ட சத்துள்ள உணவு கிடைக்காதவர்கள் சப்ளிமெண்ட்ஸை எடுத்து கொள்ளலாம்.