எந்த அளவு சாப்பிடுகிறோம், எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் மற்றும் என்ன உணவுகளை சாப்பிடுகிறோம் என்ற இந்த மூன்று விஷயங்கள் ஒரு நபரின் உடலை எடையை நிர்வகிக்கிறது. உடல் எடை கட்டுக்குள் இருக்கிறதா அல்லது அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா என்ற விஷயங்களை பெரும்பாலும் உணவு தான் முடிவு செய்யும். அதாவஹ்டு, உடை உடல் எடை அதிகரிப்பு அல்லது எடை குறைப்பு இரண்டுமே பெரும்பாலும் உணவைச் சார்ந்து தான் இருக்கிறது.
உடற்பயிற்சி தேவை என்றாலும் உணவு கட்டுப்பாடு தான் எடை குறைப்பதில் மிகவும் அவசியம். அதே போல உடல் எடை அதிகரிப்பு மற்றும் உடல்நல கோளாறுகள் உட்பட பலவற்றுக்கு நீங்கள் எந்த நேரத்தில் சாப்பிடுகிறீர்கள் என்பதும் முக்கியம். இரவு நேரத்தில் தாமதமாக உணவு சாப்பிடுவது உங்கள் உடல் எடையை அதிகரிக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது.
இரவு நேரத்தில் உணவை ஏன் தாமதமாக சாப்பிடக் கூடாது : நீங்கள் சாப்பிட்ட உணவை செரிமானம் செய்வதில் உடலுக்கு சில மணிநேரங்கள் தேவை. இந்த அடிப்படையில், பல காலமாக வீட்டிலும் சரி, மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்களும் சரி, இரவு நேரத்தில் அதாவது டின்னரை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரமாக சாப்பிட்டுவிட வேண்டும் என்று கூறி வருகிறார்கள். பலரும் அதிகபட்சம் இரவு எட்டு மணிக்குள் இரவு உணவை சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்கள். இரவு நேரத்தில் உணவு சாப்பிட்டவுடன் நீங்கள் தூங்கும் பொழுது அது செரிமானம் ஆகாமல் தாமதமாகும். இதனால் பல்வேறு பிரச்சனைகள் எழலாம்.
இரவு உணவின் முக்கியத்துவம் : இரவு நேரத்தில் பெரும்பாலும் உடலுக்கு எந்த வேலையும் இருக்காது. சாப்பிட்ட உடனேயே பலரும் தூங்கச் சென்று விடுவார்கள். அது மட்டுமின்றி இரவு உணவிற்கு பிறகு, குறைந்தபட்சம் அடுத்த 8 மணி நேரங்களுக்கு உடலுக்கு எந்தவிதமான உணவும் கிடைக்காது. எனவே இரவு உணவு நீங்கள் என்ன உணவுகளை சாப்பிடுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம்.
இரவு உணவும் எடை அதிகரிப்பும் : உடல் எடை அதிகரிப்பதற்கு தாமதமாக டின்னர் சாப்பிடுவது தான் காரணம் என்று பலரும் நினைக்கிறார்கள். இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிடுவது அல்லது லேட் நைட் டின்னர் பழக்கமாக கொண்டிருப்பது ஆகிய அனைத்துமே உடல் எடை அதிகரிப்பதற்கும் பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கும் காரணமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த எண்ணம் தவறானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். நீங்கள் எந்த நேரத்தில் சாப்பிடுகிறீர்கள் என்பது உங்களை பாதிப்பதை விட, நீங்கள் எந்த வகையான உணவுகளை சாப்பிடுகிறீர்கள் என்பது தான் உங்களை அதிகமாக பாதிக்கிறது என்று கூறியுள்ளனர்.
உதாரணமாக இரவு 8 மணிக்கு மேல் அல்லது அதற்கும் தாமதமாக இரவு உணவை சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை சாப்பிடுகிறார்கள். இது இயற்கையாகவே எடையை அதிகரிக்கச் செய்யும். எனவே இரவு நேரத்தில் தாமதமாக உணவு சாப்பிடுவார்கள், வழக்கத்தை விட அதிகமான உணவுகளை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கிறது.
இந்த உணவுகள் பெரும்பாலும் அதிக கலோரிகள் கொண்டவை. எனவே நீங்கள் இதை சாப்பிட்டவுடன் உடலுக்கு எந்த உழைப்பும் இல்லாமல் தூங்கி விடுவதால் இவை நேரடியாக எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். எனவே நீங்கள் இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிட்டால் கூட என்ன உணவு சாப்பிடுகிறீர்கள் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தினால் பிரச்சனைகள் ஏற்படாது.