மெனோபாஸ் (Menopause) என்பது ஒரு பெண்ணுடைய மாதவிடாய் சுழற்சியின் முடிவை குறிக்கும் ஒரு இயற்கையான உயிரியல் (biological process) செயல்முறையாகும். பெரும்பாலும் பெண்களின் 40 அல்லது 50-களில் (பொதுவாக 48 முதல் 53 வயது வரை) மெனோபாஸ் ஏற்படுகிறது. மேற்கண்டவாறு குறிப்பிட்ட வயதை கடக்கும் பெண்களுக்கு ஒரு வருடத்திற்கும் மேல் மாதவிடாய் ஏற்படாத போது மட்டுமே மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிற்கும் பருவத்தை எதிர்கொள்வார்கள்.
வயதுக்கு ஏற்ப பெண் பாலியல் ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் இயற்கையான சரிவின் விளைவாக மெனோபாஸ் நிகழ்கிறது. இதனால் சினைப்பைகள் இறுதியில் முட்டைகளை வெளியிடுவதை நிறுத்துகின்றன, மேலும் கர்ப்பம் அல்லது மாதவிடாயை கட்டுப்படுத்துகின்றன. மொத்தத்தில் மெனோபாஸ் நெருங்கும் போது குறிப்பிட்ட பெண்களின் உடல் சில ஹார்மோன் மாற்றங்களுக்கு உள்ளாகிறது. இவற்றில் பல ஹார்மோன் மாற்றங்கள் கருமுட்டை பற்றாக்குறையுடன் பிணைக்கப்பட்டுள்ளன.
ஒழுங்கற்ற மாதவிடாய் : சில பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சிகளின் நீளம் குறைவாக இருக்கும், திடீரென்று இயல்பாக இருக்கும். பெருமபாலான பெண்களுக்கு மெனோபாஸின் போது மாதவிடாய் ஓட்டம் (period flow) படிப்படியாகக் குறைவது வழக்கம். இருப்பினும் சில பெண்களுக்கு மெனோபாஸின் போதும் கூட வலுவான ஓட்டம் இருக்கலாம். எனினும் period flow-வில் ஏற்படும் மாற்றத்தின் அளவு உடலாலும், வேறு ஏதேனும் கருப்பையில் இருக்கும் அசாதாரணங்களாலும் தீர்மானிக்கப்படுகிறது. மெனோபாஸில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்தாலும், பெரிமெனோபாஸின் போது அது ஊசலாடுகிறது. அதனால் தான் பெண்களின் மாதவிடாய் சுழற்சி மிகவும் ஒழுங்கற்றதாகிறது.
குறைந்த லிபிடோ : லிபிடோ என்பது ஒரு நபரின் ஒட்டுமொத்த பாலியல் உந்துதல் அல்லது பாலியல் செயல்பாடுகளுக்கான விருப்பத்தை குறிக்கும் ஒன்றாகும். மெனோபாஸ் காலத்தில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெண்களுக்கு லிபிடோ அளவு குறைகிறது. இந்த ஹார்மோன் அளவு குறைவதால் யோனி வறட்சி மற்றும் இறுக்கம் ஏற்பட கூடும். இது உடலுறவின் போது வலியை ஏற்படுத்தும். மெனோபாஸின் இந்த அறிகுறிகள் உடலுறவில் பெண்களுக்கு ஆர்வத்தை குறைக்கும்.
எடை அதிகரிப்பு : மெனோபாஸின் போது நிகழும் ஹார்மோன் மாற்றங்கள் இடுப்பு மற்றும் தொடை பகுதிகளை விட வயிற்றை சுற்றிய பகுதிகளில் எடையை அதிகரிக்க செய்யும். கட்டுப்பாடற்ற எடை அதிகரிப்பும் ஏற்படும். இந்த நேரத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் இதய நோய் அபாயம் கணிசமாக அதிகரிக்கிறது. மற்றொரு காரணி வயதுக்கு ஏற்ப இயற்கையாகவே வளர்சிதை மாற்றமானது குறைகிறது.
சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI - Urinary tract infection): ஒருகட்டத்தில் அடிக்கடி சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்பட்டால் அது மெனோபாஸ் நெருங்கி வருவதை குறிக்கலாம். பெண்களுக்கும் குறிப்பாக மாதவிடாய் நிற்க போகும் அல்லது நின்ற பெண்களுக்கும் UTI மிகவும் பொதுவான பாக்டீரியா தொற்று ஆகும். மெனோபாஸின் முந்தைய மாதங்களில் குறைவாகவும், மாதவிடாய் நின்றவுடன் மிகவும் பொதுவானதாகவும் இந்த தொற்று இருக்கும்.