இந்தியாவில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய யோகா கலை, தற்போது உலகம் முழுவதும் பிரபலம் அடைந்து வருகிறது. யோகா என்பது தியானம், சுவாச பயிற்சி மற்றும் உடல் இயக்கம் ஆகியவற்றின் கலவையாகும். அவசர, அவசரமான இந்த ஆன்லைன் யுகத்தில் மனதையும், உடலையும் ஆரோக்கியமாக பராமரிக்க யோகா பயிற்சிகள் ஒரு சிறந்த விஷயமாக உள்ளன. சர்வதேச யோகா தினம் விரைவில் வர உள்ள நிலையில், யோகா பயிற்சியை தினந்தோறும் மேற்கொள்ள வேண்டியதற்கான அத்தியாவசிய காரணத்தை விளக்கும் 17 விஷயங்களைப் பற்றி உங்களுக்கு விளக்கியுள்ளோம்.
9. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்: யோகா வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எடை இழப்புக்கு உதவுவது மட்டுமல்லாமல், யோகா வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. அதிக வளர்சிதை மாற்றம் என்பது உங்கள் உடல் கலோரிகளை எரிப்பதில் சிறப்பாக உள்ளது, இது எதிர்காலத்தில் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.
11. நேரம் ஒதுக்க வேண்டியதில்லை: ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வது அல்லது எடைப் பயிற்சி செய்வது அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளை அனைவராலும் செய்ய முடியாது. மனம் மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய யோகாவை ஒருவர் தங்களது நேரத்திற்கு ஏற்றார் போல் செய்யலாம். அதற்கேன தனியாக நேரத்தை இறுதி செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
15. தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும்: யோகா சிறந்த ரத்த ஓட்டம், மன ஆரோக்கியம், நெகிழ்வு தன்மை மற்றும் உடலின் பல்வேறு அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு உதவுவதால், இந்த காரணிகளும் சிறந்த தரமான தூக்கத்தை ஊக்குவிக்கின்றன. தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்ற பல்வேறு தூக்கக் கோளாறுகளையும் யோகா குணப்படுத்த உதவும்.